காதலரை திடீர் திருமணம் செய்த சகுனி, மாஸ் பட நடிகை ப்ரணிதா – 3 நாட்கள் கழித்து வெளியான புகைப்படம்.

0
1994
pranitha
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை அழகாக இருக்கும் பல்வேறு நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் சரியாக அமைவதில்லை. அந்த வகையில் பிரனீதா சுபாஷ்ஷும் ஒருவர். தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரனீதா சுபாஷ். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தின் மூலம் ரசிகர்களை பரிச்சயமானார். மேலும், சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அழகான தோற்றம் இருந்த போதும் கார்த்தி மற்றும் சூர்யாவை தவிர இவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினிகணேசனும் சூரிலிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும் தற்போது கன்னடம், தெலுங்கு போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரணிதா சுபாஷ்.

இதையும் பாருங்க : தமிழ் பட ஐட்டம் சாங்கு இது எவ்ளோவோ தேவலாம் -கிளாமர் போட்டோவின் அசிங்கமான கமண்டுகளுக்கு ரைசா பகிர்ந்த பதிவு.

- Advertisement -

தமிழில் பட வாய்ப்புகள் தற்போது அம்மணிக்கு சுத்தமாக இல்லை. இருப்பினும் தற்போது கன்னடத்தில் ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்ல தற்போது ஹிந்தியில் வெளியாக இருக்கும் புஜ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் திடீர் திருமணம் செய்துள்ளது இவரது ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மே 28-ஆம் தேதி நடிகை பிரணிதா தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவியது. இதை பலரும் வதந்தி என்று தான் நினைத்தார்கள். இப்படி ஒரு நிலையில் நித்தின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement