தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால், அனைவரும் டாப் நடிகர்களாக ஜொலித்து விடுவது இல்லை. அந்த வகையில் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தும் பெரிய நடிகராக பெயர் எடுக்க தவறியவர் நடிகர் ஜித்தன் ரமேஷ். இவருடைய தந்தை ஆர்பி சவுத்ரி ஆவர். இவர் சினிமா உலகில் மிகப்பிரபலமான தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதுமட்டும் இல்லாமல் இவர் நடிகர் ஜீவா அவர்களின் சகோதரரும் ஆவார். ரமேஷ் அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முதலில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த வித்யார்த்தி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.
அதற்கு பின் இவர் இயக்குனர் ஆர்.கே.வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அந்த படத்திற்கு பின்னர் இவரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைத்து வந்தனர். இவர் ஜீவாவிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், நடிகர் ஜீவா அளவிற்கு இவரால் பெயரெடுக்க முடியவில்லை. தமிழில் இதுவரை 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் ரமேஷ்.
இதையும் பாருங்க : குழந்தை பிறந்தும் நாயகியாக கலக்கிய நடிகை ரதி என்ன ஆனார் ? இப்போ எப்படி இருக்கார், அவரின் மகன் இந்த நடிகர் தான்
ஜித்தன் ரமேஷ் திரைப்பயணம்:
ஆனால், அந்த 10 படங்களும் தோல்வியில் தான் முடிந்தது. மேலும், 2011 ஆம் ஆண்டு வெளியான “ஓஸ்தி ” படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், அதற்கு பின்னர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஒரு நடிகனின் வாக்கு ஆண்டு ” படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜித்தன் ரமேஷ். அதன் பின்னர் விஜய் நடித்த “ஜில்லா” படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் ஒரு சில நொடிகளுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரமேஷ்:
நீண்ட வருட இடைவேளைக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ரமேஷுன் “ஜித்தன் 2” படமும் எதிர்பார்த்த அளவில் அளவிற்கு வெற்றியடையவில்லை. இறுதியாக உங்கள போடணும் சார் என்ற படத்தில் ரமேஷ் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் தோல்வி தான் அடைந்தது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். நிகழ்ச்சிக்கு பின் இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஜித்தன் ரமேஷ் அளித்த பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் ஜித்தன் ரமேஷ் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் குறித்து கூறியிருந்தது, நிறைய பேர் என்னிடம், உங்க அப்பா பெரிய தயாரிப்பாளர், உங்க தம்பி பெரிய நடிகர், நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்பார்கள்? எனக்கு படம் அமையவில்லை. நான் கதையை சரியாக தேர்ந்தெடுக்க வில்லை. அவங்க அப்படி இருக்கிறார்கள். அதுக்கு நான் என்ன பண்ண முடியும். அத விட்டுட்டு அவங்கள வெச்சு ஏன் கம்பர் பண்றாங்கன்னு புரியல. எங்க வீட்டுக்குள்ளேயே நாங்க கம்பர் பண்ணினது கிடையாது.
கம்பேர் பண்ணவது குறித்து ரமேஷ் சொன்னது:
ஆனால், வெளி உலகத்துல ஏன் இப்படி பேசுறாங்கன்னு எனக்கு புரியல. என்னை ஜித்தன் ரமேஷாக மட்டும் பாருங்க. என்னுடைய அப்பாவும், தம்பியும் வைத்து கம்பேர் பண்ணிப் பேச வேண்டாம். இந்த மாதிரி பேக்ரவுண்ட் வைத்த குடும்பத்தில் இருந்து வந்தாவே நம்முடைய தனித்துவம் மறைந்து போகுது. எனக்கு உள்ளேயும் வலிகள் இருக்கு, உணர்வுகள் இருக்கு. நானும் ஒரு மனிதன் தான் என்று புரிந்துக் கொண்டு பேசினால் நன்றாக இருக்கும். கம்பேர் பண்ணி பேசுறது எனக்கு பிடிக்காது என்று கூறியிருந்தார்.