நடிகை ப்ரியா ஆனந்தா இது..! இப்படி மாறிட்டாங்க.! அதிர்ச்சி புகைப்படம் இதோ.!

0
269
Actress-Priya

தமிழில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த “வாமனன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை என்றாலும் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிட்சியமானவர் தான்.

சென்னையை சேர்ந்த இவர் திரை துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்து வந்தார். “வனமகன்” படத்திற்கு பின்னர் தமிழில் “எதிர் நீச்சல், வணக்கம் சென்னை” போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளர். அது போக தெலுகு, மலையாளம், ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளர்.தற்போது மலையாளத்தில் ரோஷன் ஆன்ரீவ் இயக்கும் ‘காயகுளம் கொச்சுண்ணி ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வரலாற்று சிறப்புமிக்க கதைக்களம் கொண்ட இந்த படத்தில் அம்மணி ஒரு பழங்கால கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து தனது புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நடிகை பிரியா ஆனந்த. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் அடைந்து, பிரியா ஆனந்த்தா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

அந்த படத்திற்காக ஒரு வயதான அம்மணியை போல கெட் அப்பில் இருக்கிறார் நடிகை பிரியா ஆனந்த். இதுவரை முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டாததால் அம்மணியால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்ற முடியவில்லை.இதனால் தான் அம்மணி இப்படி ஏதாவது வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து மார்க்கட்டை பிடித்து விடலாமா என்று எண்ணுகிறாரோ என்னவோ.