புது வீட்டில் செம்மையாக பார் கட்டிய தமிழ் கடவுள் முருகன் சீரியல் நடிகை – அதற்க்கு அவர் சொன்ன காரணம் .

0
381
priya
- Advertisement -

புதிய வீட்டில் செம்மையாக பார் வைத்துள்ள சீரியல் நடிகை ப்ரியாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியா பிரின்ஸ். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் ஜர்னலிசம் படித்தவர். இவர் செய்தி வாசிப்பாளராக தான் மீடியாவுக்குள் நுழைந்தார். பின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் விஜய் டீவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதில் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இவருக்கு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. மேலும், இவர் சன் டிவி, விஜய் டிவி போன்ற பல சேனல் சீரியல்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் தமிழ் கடவுள் முருகன் சீரியலில் பார்வதி ரோலில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ப்ரியா திரைப்பயணம்:

இந்த தொடரில் பார்வதி கேரக்டரில் நடிப்பதற்காக 5 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருந்தார் பிரியா. அந்த தொடருக்கு பின்னர் இவர் மாப்பிள்ளை, பொன்மகள் வந்தால், கண்மணி போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் ரஜினியின் 2.0, சூர்யாவின் ‘பசங்க 2’, வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

ப்ரியா நடிக்கும் சீரியல்:

அதிலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன் கணவருடன் கலந்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு 16 வயது ஆகிறது. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் ப்ரியா:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ சூட் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கூட பிரியா தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை கூட பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் பிரியா தன்னுடைய வீட்டில் பார் வைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீட்டில் பார் வைத்த ப்ரியா:

அதாவது, பிரியாவுக்கு சென்னையில் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பது பல நாள் கனவு. தற்போது அதை நினைவாகிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ப்ரியா தான் கட்டிய புது வீட்டை வீடியோவாக எடுத்து யூடியூபிலும் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், பிரியா தன்னுடைய வீட்டில் ஒரு பார் செட்டப்பையும் வைத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோவை வைரலாக்கியும் வருகின்றனர்.

Advertisement