கருப்பாக இருப்பதாலும், குண்டாக மாறியதாலும் எதிர்கொண்ட கேலிகள் – பதிலடி கொடுத்த பிரியாமணி

0
813
priyamani
- Advertisement -

தனது நிறம், உடல் பருமன் குறித்து விமர்சித்தவர்களுக்கு பிரியாமணி பதிலடி கொடுத்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை பிரியாமணி. இவர் தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ‘எவரே அதகாடு ’ என்ற படத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் ப்ரியாமணி நடித்து பிரபலமான நடிகை ஆனார். பின் 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரியாமணி. அதற்கு அது ஒரு கனாக்காலம், மது, பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் ப்ரியாமணி.

-விளம்பரம்-

இருந்தாலும் இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. பின் பிரியாமணி அவர்கள் தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் இவர் ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘1 2 3 இப்படத்தில் கெட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர்’ என்ற பாடலில் ப்ரியாமணி நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பிரியாமணி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்திருந்தார்.

- Advertisement -

ப்ரியாமணி திருமணம்:

கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை ப்ரியாமணி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் ப்ரியாமணி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் எடுக்கும் புகைப்படம், வீடியோக்கள், ரசிகர்களுடன் உரையாடுவது என்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் பிரியாமணி உடைய நிறம், உடல் பருமன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் பிரியாமணி பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

ப்ரியாமணி கொடுத்த பதிலடி:

அதில் அவர் கூறியிருப்பது, நான் கருப்பாக இருக்கிறேன், குண்டாகி விட்டேன் என சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சித்து வருகிறார்கள். நீங்கள் ஒரு ஸ்பாட்லைட்டில் இருக்கும் போது உங்கள் எடை கூடினாலும், அதீத எடை குறைந்தாலும் பொதுமக்களால் கவனிக்கப்படுவீர்கள். பிரபலமானவராக இருந்தால் இது ஒரு பகுதியாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் என் நிறம், உடல் எடையை பற்றி பேசுகிறார்கள். 99 சதவீதம் பேர் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ? அப்படியே உங்களை விரும்புகிறார்கள்.

-விளம்பரம்-

நிறம், உடல் பருமன் குறித்து கூறியது:

ஆனால், இந்த ஒரு சதவீதம் பேர் தான் நான் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என்று விமர்சிக்கின்றனர். இந்த தொழிலில் நீங்கள் எல்லா நேரத்திலும் முதன்மையானதாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டி இருக்கிறது. உங்கள் உடல், தோல், முடி மற்றும் நகங்கள் பராமரிக்க வேண்டும். ஆனால், இதை செய்வது கடினமாக உள்ளது. ஒரே ஒரு நாள் நான் நானாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு பிடித்ததை சாப்பிட விரும்புகிறேன். நான் அழகாக இருக்க விரும்பவில்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எண்ணம். நீங்கள் ஏதாவது பாசிட்டிவாக சொல்ல விரும்பினால் அதை சொல்லுங்கள்.

விமர்சித்தவர்களுக்கு ப்ரியாமணி சொன்னது:

அப்படி இல்லை என்றால் உங்கள் கருத்துக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தை ஏன் மற்றவர்கள் மீது திணிக்க முயற்சிக்கிறீர்கள். உங்கள் ரசிகர்கள் மற்றும் பாலவோர்ஸ்க்கு எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னைப் பற்றி அவர்கள் உருவாக்கும் சில மீம்ஸ்களை நான் ரசிக்கிறேன். அதை ஷேர் செய்தும் மகிழ்கிறேன். ஆனால், சில நேரங்களில் சில கருத்துகள் ஜீரணிக்க முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கிறது. இது போன்ற ட்ரோல்களை நான் உடனே உடனடியாக ப்ளாக் செய்து விடுகிறேன் என்று கூறி பிரியாமணி கூறி இருக்கிறார்.

Advertisement