தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியாமணி. இவர் தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ‘எவரே அதகாடு ’ படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ப்ரித்விராஜின் ‘சத்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார். பின் இவர் தமிழில் வெளி வந்த ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு இவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார். இருந்தாலும், இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. மேலும் பிரியாமணி அவர்கள் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் இடையில் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பிரியாமணி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்திருந்தார்.
ப்ரியாமணி திருமணம்:
அதன் பின் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் ப்ரியாமணி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார். பின் இவர் வெப்சீரிஸ், சினிமாக்களில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருந்த ஜவான் படத்தில் பிரியாமணி நடித்திருந்தார். இதனை அடுத்து இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த ஆர்டிகள் 370 படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

ப்ரியாமணி பேட்டி:
இதைத் தொடர்ந்து தற்போது இவர் மைதான், கன்னடத்தில் கைமாரா, தமிழில் கொட்டேஷன் கேம்ஸ் போன்ற பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியாமணியிடம் பான் இந்தியா படங்கள் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்குரிய ப்ரியாமணி, பான் இந்தியா என்ற சொல்லை பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள். நாம் அனைவரும் இந்தியர்கள்.

பான் இந்தியா படங்கள்:
அப்படி இருக்கும்போது எதற்காக அந்த வார்த்தையை சொல்கிறீர்கள்? இந்தி நடிகர்கள் தென்னிந்திய படங்களில் நடித்தால் அவர்களை தென்னிந்திய நடிகர்கள் என்று சொல்கிறோமா? ரஜினி, கமல், தனுஷ் எல்லோருமே பல மொழிகளில் நடிக்கிறார்கள். அவர்களை யாருமே பான் இந்தியா நடிகர்கள் என்று சொல்லவில்லை. மொழி முக்கியம் இல்லை, நடிக்கும் கதாபாத்திரங்கள் தான் முக்கியம். பான் இந்தியா என்ற வார்த்தையை தயவுசெய்து இனி சொல்லாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.






