தமிழ் சினிமாவில் நடிகைகளை வலுக்கட்டாயமா அதை செய்ய சொல்கின்றனர் – படு ஓப்பனாக பேசிய பிரியாமணி.

0
1279
priyamani
- Advertisement -

கவர்ச்சிக்காக தமிழ் நடிகைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் என்று பிரியாமணி ஓபனாக பேசியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை பிரியாமணி. இவர் தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ‘எவரே அதகாடு ’ என்ற படத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தினை பி. பானு ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக வல்லபா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ப்ரித்விராஜின் ‘சத்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார் ப்ரியாமணி.

-விளம்பரம்-

அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் ப்ரியாமணி நடித்து பிரபலமான நடிகை ஆனார். அடுத்ததாக ப்ரியாமணி தமிழ் திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்து 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இதில் கதாநாயகனாக வசீகரன் என்பவர் நடித்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு அது ஒரு கனாக்காலம், மது, பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, மது, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் ப்ரியாமணி.

- Advertisement -

இதையும் பாருங்க : மாதவன் இதுக்கு தான் பிளான் போட்றார, அதான் இப்படி பேசிக்கிட்டே இருக்கார் – ஜக்கியுடன் ஒப்பிட்டு கேலி செய்த நபருக்கு மாதவன் பதிலடி.

பிரியாமணி திரைப்பயணம்:

இருந்தாலும் இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. மேலும் பிரியாமணி அவர்கள் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் இவர் ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் நடித்து இருந்தார். இதில் ஹீரோவாக பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பிரியாமணி திருமணம்:

மேலும், இப்படத்தில் இடம்பெற்ற ‘1 2 3 4 கெட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர்’ என்ற பாடலில் ப்ரியாமணி நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பிரியாமணி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்திருந்தார். பின் திரையில் இவர் காணாமல் போனார். அதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை ப்ரியாமணி திருமணம் செய்து கொண்டார்.

பிரியாமணி நடிக்கும் படங்கள்:

திருமணத்திற்குப் பிறகும் ப்ரியாமணி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். தற்போது இவர் வெப்சீரிஸ், சினிமாக்களில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த ஃபேமிலி மேன் என்ற திரைப்படத்தில் பிரியாமணி நடித்திருந்தார். தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் பாலிவுட் படத்திலும் பிரியாமணி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரைப்பயணம் குறித்து சமீபத்தில் பிரியாமணி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

பிரியாமணி அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, தமிழ் திரை உலகில் நான் பல சவால்களை எதிர் கொண்டேன். சில நடிகைகள் வலுக்கட்டாயமாக கிளாமர் ரோலுக்கு தள்ளப்படுகிறார்கள். பாலிவுட் நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு, தமிழ் நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு. இருந்தாலும் வேண்டும் என்றே தமிழ் நடிகைகளை கிளாமர் சீன்களில் நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இப்போது தான் அந்த நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி பிரியாமணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement