சமந்தாவை தொடர்ந்து கணவரை விவகாரத்து செய்கிறாரா பிரியாமணி ? சர்ச்சைக்கு அவரின் சூசக பதிலை பாருங்க.

0
713
priyamani
- Advertisement -

சமந்தாவை தொடர்ந்து பேமிலி மேன் தொடரில் நடித்த பிரியாமணியும் தன் கணவரை பிரியப்போவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியாமணி. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து இருந்தார். சமந்தா விவாகரத்திற்கு முக்கிய காரணம் சமந்தா திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வந்ததாகவும், மேலும் பேமிலி மேல் தொடரில் அவர் நடித்தது நாகர்ஜுனா குடும்பத்திற்கு பிடிக்கவில்லை.

-விளம்பரம்-
Priyamani mustafa

அதனால் சில மனஸ்தாபங்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த தகவல் அனைத்தையும் மறுத்தார் சமந்தா. இப்படி ஒரு நிலையில் பேமிலி மேன் தொடரில் நடித்த நடிகை பிரியாமணியும் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவி வந்தது. பிரியாமணி கணவரான முஸ்தபா ராஜ் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர். அதன் பின்னர் தான் இவர் பிரியாமணியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து உள்ளார்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று (Nov-8, Epi- 748) முழு எபிசோட் இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் முஸ்தபா ராஜ் தன்னிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறவில்லை என்று அதிர்ச்சி புகாரை அளித்து இருந்தார் ஆயிஷா. இதுகுறித்து பிரியாமணியின் கணவர் கூறுகையில் குழந்தைகளின் பராமரிப்புக்கு தேவையான அனைத்தையும் தவறாமல் செய்து வருகிறேன். இப்போது அவர் என்னிடம் இருந்து பணம் பறிப்பதற்கு இந்த செயலில் இறங்கி இருக்கிறார்.

2010-ஆம் ஆண்டில் இருந்தே இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருகிறோம். கடந்த 2013-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றோம் என்று கூறினார். தன் கணவரின் முதல் மனைவியால் ஏற்பட்ட பிரச்சனையால் முஸ்தபா, ப்ரியாமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் வதந்தி கிளம்பியது. தீபாவளியை கணவர் முஸ்தபாவுடன் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ப்ரியாமணி.

-விளம்பரம்-

Advertisement