என்னது ரக்ஷிதா ட்ரஸ்ட் நடத்தி வருகிறாரா – மக்களுக்காக இறங்கி அவர் செய்த உதவி. குவியும் வாழ்த்துக்கள்.

0
166
Rachitha
- Advertisement -

தன்னுடைய டிரஸ்ட் மூலம் ரக்ஷிதா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறோம் தகவல் தான் தற்போது இணையத்தில் பதிலாகி வருகிறது கடந்த ஒரு வாரமாக சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள்.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

சில தினங்களுக்கு முன் தான் காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக சோசியல் மீடியாவிலும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. அதோடு சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலருமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

பிரபலங்கள் செய்த உதவி:

அறந்தாங்கி நிஷா தன்னுடைய வாகனத்தில் ஆயிரம் பேருக்கு உணவுகளை வைத்துக்கொண்டு திருச்சியில் இருந்து சென்னையில் வந்து கொடுத்து இருக்கிறார். இவரை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை நிச்சயம் செய்வேன் என்றும் கலா மாஸ்டர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் உணவு, பால் பாக்கெட் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தும் மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும் உதவிகளையும் செய்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

ரக்ஷிதா மகாலட்சுமி செய்த உதவி:

இந்த நிலையில் சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியும் உதவி செய்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, உங்களுக்கு அடிப்படையான விஷயங்கள் தேவைப்பட்டால் உங்களது இடத்தை குறிப்பிடுங்கள். நாங்கள் உங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் என்று கூறியிருக்கிறார். அதோடு இவர் ‘ரக்சிதா மகாலட்சுமி அறம் டிரஸ்ட்’ என்ற பெயரில் பல உதவிகளை செய்து இருக்கிறார்.

ரக்ஷிதா மகாலட்சுமி குறித்த தகவல்:

ரக்‌ஷிதாவின் இந்த செயலை பார்த்து பலருமே பாராட்டி வருகிறார்கள். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement