திருமா சார் இதனால் தான் அப்படி என்னை பார்த்தார் – மேடையில் நடந்த விஷயம் குறித்து வைரல் ஆங்கர் அகிலா வெளியிட்ட வீடியோ.

0
701
- Advertisement -

விசிக கட்சி தலைவர் திருமாவளவனுடன் குறித்த சர்ச்சைக்கு நடிகை அகிலா கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அகிலா. இவர் 17 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

-விளம்பரம்-

இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சீரியலில் நடிக்க அறிமுகமானார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற சீரியல் மூலம் தான் இல்லத்தரசிகளின் மத்தியில் அகிலா அறிமுகமானார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் ரோஜா கூட்டம், சிவசக்தி, திருமதிசெல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார்.

- Advertisement -

அகிலா நடித்த சீரியல், படங்கள்:

மேலும், இவர் சீரியலில் மட்டும் இல்லாமல் சரவணன், மனதோடு மழைக்காலம், கண்ணும் கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம், திருவண்ணாமலை போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் சீசன்ஸ் ஈவன்ட்ஸ் என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார். கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த அபியும் நானும் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் அகிலா குறித்த செய்திகள் தான் வைரலாகி வருகிறது. குறிப்பாக இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து விட்டார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அகிலா குறித்த சர்ச்சை:

இந்நிலையில் இது தொடர்பாக அகிலா வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், சில தினங்களாகவே விசிகவில் அகிலா என்ற வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ஒரு மல்டி பெசிலிட்டி உள்ள மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது. அதற்காக சிறப்பு விருந்தினர் மற்றும் தொகுப்பாளனியாக நான் சென்றிருந்தேன். அங்கு சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் வந்திருந்தார்.

அகிலா கொடுத்த விளக்கம்:

மேலும், ஒருவரை மேடையில் பேச கூப்பிடும் போது அவர்களுக்கு உரிய தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும். அவர் முன்னே எழுந்து வந்துவிட்டார். இருந்தாலும் அவருக்கான மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவரைப் பற்றி புகழ்ந்து பேசி இருந்தேன். நான் பேசுவதை அவர் வியந்து கேட்டிருந்தார். இதைப் பார்த்து பலருமே எங்கள் இருவரையும் பற்றியும் விமர்சித்து பேசியிருந்தார்கள். பலர் எங்களுடைய உடை, அங்கு நடந்த சில சம்பவங்களை வைத்து விமர்சித்து பேசி இருந்தார்கள்.

அரசியல் குறித்து சொன்னது:

அது மட்டும் இல்லாமல் நான் கட்சியில் சேர்ந்து விட்டதாக கூறுகிறார்கள். நான் எந்த கட்சியிலும் அரசியலிலும் சேரவில்லை. நான் அங்கு தொகுப்பாளினியாக மட்டுமே சென்றேன். நான் பேசியதை கேட்டு அவர் வியப்பாக பார்த்தாலே தவிர அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை. யாரும் தவறாக சித்தரித்து போடாதீர்கள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement