ஹிந்தி திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘வாஹ்! லைஃப் ஹோ தோ ஐஸி!’. இந்த படத்தினை இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கியிருந்தார். இதில் பிரபல நடிகை ராதிகா ஆப்தே ‘அஞ்சலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தான் ராதிகா ஆப்தே அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து பெங்காலி மொழியில் ‘அன்டாஹீன்’ மற்றும் மராத்தி மொழியில் ‘சமாண்டர்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் ராதிகா ஆப்தே.
தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்தார். ஆகையால், அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார் ராதிகா ஆப்தே. 2012-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளி வந்த திரைப்படம் ‘தோனி’. இது தான் நடிகை ராதிகா ஆப்தே தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் படம். ‘தோனி’ படத்துக்கு பிறகு ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச் செல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி 2’ என அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார் நடிகை ராதிகா ஆப்தே.
இதையும் பாருங்க : பிக் பாஸ் 5 தொகுப்பாளர் யார் தெரியாமா ? மார்ச் மாதமே அட்வான்ஸ் எல்லாம் வாங்கி செலவும் பண்ணிட்டாராம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய அவர், நிர்வாண வீடியோ வெளியானதும் நான்கு நாட்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. எனது கார் டிரைவர், வீட்டு வேலை செய்பவர்கள், உறவினர்கள் யாரேனும் அந்த வீடியோவை பார்த்து இருப்பார்களோ என்ற அச்சத்தினால் மனம் புழுங்கி இருந்தேன்.
ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா படத்தில் ஏமாற்றப்பட்டேன். எதிர்பார்த்த சம்பளம் தரவில்லை. படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் எனது நேரத்தையும், திறமையையும் விரயமாக்கினர். சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமா என்றெல்லாம் யோசித்தேன். அதில் ஏற்பட்ட அனுபவம் நான் ஒதுக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் என்னை உறுதியாக இருக்க வைத்தது என்று கூறியுள்ளார்.