இரண்டு பெண் குழந்தைகள் தொடர்ந்து..மூன்றாவதாக பிறந்த குழந்தை..! ரம்பாவே வெளியிட்ட புகைப்படம்

0
1489
ramba

நடிகை ரம்பா சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த காலத்தில், சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் அஜித் போன்ற அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

- Advertisement -

தமிழ், தெலுகு, ஹிந்தி, மலாயாளம் என்று பல மொழி படங்களில் நடித்து காலாக்கி வந்த ரம்பா, 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 2 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என்று தனது கலை பயணத்தை தொடர்ந்து வருகிறார்

நடிகை ரம்பாவுக்கு ஏற்கனவே லான்யா என்ற 7 வயது மகளும், 3 வயதில் ஷாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் நடிகை ரம்பா, மூன்றாவது முறை கர்பமாக இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார் ரம்பா

-விளம்பரம்-

மேலும், ரம்பாவின் கணவர் வளைகாப்பு விழாவை கூட நடத்தி இருந்தார். இந்நிலையில் மூன்றாவது முறை கர்ப்பமாக இருந்த ரம்பாவிற்கு கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கனடா நாட்டில் உள்ள டொரோண்டோ மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ரம்பா.

Advertisement