விவாகரத்துக்கு பிறகு நடிகை “ரம்பா” இப்படி மாறிட்டாங்க ? புகைப்படம் உள்ளே

0
4779
Rambha

1979ஆம் ஆண்டு விஜயவடாவில் பிறந்தவர் ரம்பா. இவருடைய உண்மையான பெயர் விஜயலட்சுமி. 7ஆம் வகுப்பு படித்த போது தனது பள்ளி ஆண்டு விழாவில் அம்மன் வேடம் அணிந்து நடித்துள்ளார் ரம்பா. இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த தெலுங்கு இயக்குனர் ஹரிஹரன் அவரை அழைத்து சென்று படத்தில் நடிக்க வைத்தார். தனது 14 வயதில் ‘ஆ ஓக்கட்டி அடக்கு’ என்ற ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

ActressRambha

- Advertisement -

அவரது நடிப்புத் திறமையை பார்த்து அசந்து போன திரையுலகம் அடுத்தடுத்து வாய்ப்புகளை அவர் முன் கொட்டியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போஜ்புரி என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார் ரம்பா.

தமிழில் 1996ல் வெளியான நவரச நாயகன் கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் ரஜினி, கமல், விஜய், அஜித், விஜயகாந்த், பிரபுதேவா, அர்ஜுன் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் அடித்தார். அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், சுயம்வரம், மின்சார கண்ணா, உன்னருகே நானிருந்தால், ஆகியவை இவர் நடித்த முக்கியமான படங்கள் ஆகும். கடைசியாக 2010ல் பெண் சிங்கம் என்று ஒரு படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

rambha-children

rambhaa

rambhaa Actress

அதன் பின்னர் கனடாவை சேர்ந்த தமிழ் தொழிலதிபர் இந்திராகுமார் பத்மநாபன் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் லாண்யா மற்றும் ஷாஷா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளது. 2015ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றனர்.

மேலும், தனது இரு குழந்தைகளை பராமரிக்க மாதம் 2.5 லட்சம் ரூபாய் கேட்டார் ரம்பா. ஒரு வருடம் இந்த கேஸ் நடந்தது. பின்னர் இருவரும் மனது மாறி சேர்ந்த வாழ்வதாக முடிவெடுத்து தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

Rambhaa

2009 முதல் 2013 வரை மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக இருந்தார் ரம்பா. மேலும், விஜய் டீவியில் ஜோடி நெம்பர் 1 நிகழ்ச்சிக்கும் ஜட்ஜாக இருந்தார். தற்போது கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக செயல்பட்டு வருகிறார் ரம்பா.

Advertisement