தனது கார் ஏறி முதியவர் பலியானதை குறித்து நடிகை ரேகா நாயர் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நேற்று இரவு நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் பலியாகி இருந்த செய்தி தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பவர் உயிரிழந்தார். சென்னை, ஜாபர்கான் பேட்டையில் உள்ள ஒரு தெருவில் மஞ்சன் மது போதையில், சாலை ஓரத்தில் படுத்து தூங்கியுள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் வேகமாக வந்த கார் மஞ்சன் மீது ஏறி இறங்கியது. அதனால் உயிருக்கு போராடியவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மஞ்சன் ஏற்கனவே உயிர் இழந்ததாக அங்கு தெரிவித்துருந்தார்கள். அதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய காரை சிசிடிவி மூலம் கண்டுபிடித்து அங்கிருந்த போலீசார் விசாரணை செய்ததில் ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்தார்கள் என்று தகவல்கள் வந்தன.
ரேகா நாயர் கார் ஏறி ஒருவர் பலி :
பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த கார் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து விபத்து நடைபெற்ற போது அந்தக் காரை இயக்கியது யார் என்பது போல் விசாரணை மேற்கொண்டார்கள். அதேபோல், விபத்தின் போது நடிகை ரேகா நாயர் காரில் இருந்தாரா என்று டிரைவர் பாண்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நடிகை ரேகா நாயரின் காரை பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் வைத்து இருந்தார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
View this post on Instagram
போலீஸ் விசாரணை:
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக நடிகை ரேகா நாயர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஜாபர்கான் பேட்டை மூளையில் ஒரு சாராயக்கடை இருக்கிறது. அந்த வழியாக நான் காரில் செல்லும்போது ரொம்ப கூட்டமாக இருந்தது, அப்போ என்னுடைய கார் என்னுடைய டிரைவர் தான் ஓட்டிட்டு வந்தாரு. அவர் லெப்ட் எடுக்கும் போது, அங்கு மனநல பாதிக்கப்பட்ட ஒருத்தர் நல்லா குடிச்சிட்டு விழுந்து கிடந்தார்.
ரேகா நாயர் விளக்கம் :
அவர் ஆல்ரெடி விழுந்து கிடந்தாரா, இல்லை வண்டியை பார்த்துட்டு விழுந்தாரா, இல்லை ரோடை கிராஸ் பண்ணாரா எதுவுமே எங்களுக்கு தெரியவில்லை. அப்போ வண்டி மூவ் ஆன உடனே, எல்லாரும் கத்தினாங்க. உடனே நாங்க வண்டியை ஸ்லோ பண்ணோம். அந்த சமயம் காரை அடிக்க எல்லாரும் வந்துட்டாங்க. உடனே நான் காரை விட்டு கீழே இறங்கி விட்டேன். அப்போ ஜெனிபர் என்கிற ஒரு பத்திரிக்கையாளர், அவங்க எனக்கு பணம் கூட தர வேண்டும். அவங்க உடனே என் வண்டியை வீடியோ எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ நான் அவங்க கிட்ட, இது என் வண்டிதான் என்று சொன்னேன்.
View this post on Instagram
பூனை என்று நினைத்தேன்:
உடனே நான் எனக்கு தெரிந்தவர்களை எல்லாம் கூப்பிட்டு, அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டேன். அதற்குப் பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கும் நானே போன் செய்து சொல்லிவிட்டேன். இதுதான் நியூஸ். ஆனா, அந்த லேடி, ரேகா நாயர் உடைய வண்டின்னு முதல்ல நியூஸ் கொடுத்துட்டாங்க. நான் முதலில் பூனை தான் குறுக்கில் வந்தது என்று நினைத்தேன். அதுதான் உண்மை. மேலும், இப்போ நான் கேரளாவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். அதற்காக நான் ரயில்வே ஸ்டேஷன் போகும்போது தான் இந்த சம்பவம் நடந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.






