ஓ.பி.எஸ் உடன் இணைத்து பணியாற்றியது குறித்து நடிகை ரேகா நாயர் ஓபன் டாக்.

0
1663
- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பல நடிகைகள் திரைத்துறையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசுவார்கள். அந்த வகையில் ஓவனாகவும் பேசும் நடிகை தான் ரேகா நாயர். நடிகை ரேகா பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வந்த நிலையில் பெரிதாக அவர்க்கு வாய்ப்புகள் அமையவில்லை. கிடைக்கும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே வாய்ப்புகள் கிடைத்தாலும் அதிலும் நடித்து வந்தார். இதனால் சினிமாவில் கதயனகியாக நடிக்க வேண்டும் என்பது இவருக்கு கனவாக இருந்துள்ளது.

-விளம்பரம்-

அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த கனவை நினைவாக்க வந்த திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கம் பாத்திபனின் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல். இப்படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பார். இது பெரிய சர்ச்சையாக மாறியிருந்தது. குறிப்பாக திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக பேசய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதிற் அடுத்து அவனுடன் வாக்குவாதத்தில் ரேகா நாயர் ஈடுபட்டார்.

- Advertisement -

அது பெரிய அளவில் பல நாட்களுக்கு சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. இதுகுறித்து பேசிய ரேகா நாயர் ‘இயக்குனர் பார்திபன் என்னிடம் கதை சொல்லும் போதோ பட படிப்பின் போதோ நிர்வாணம், அரை நிர்வாணம் என்ற வார்த்தையை துளி அளவும் உபயோகிக்கவில்லை. பார்த்திபன் அந்த காட்சிகளை எந்த கண்னோட்டதில் பார்க்கிறார் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று ரேக்கா நாயர் தெரிவித்திருந்தார்.

மேலும் மறைந்த நடிகை சித்ராவின் மரணம் குறித்தும் பல விதமாக கருதுக்களை குறி பெரிய அளவில் பிரபலமான இவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றால் கண்டிப்பாக தனுஷை திருமணம் செய்திருப்பேன் என்று தனக்கு தனுஷ் மீதுள்ள கிரஷ்ஷை வெளிப்படுத்தினார். இப்படி சினிமா பற்றி ஓபனாக பேசும் நடிகை ரேகா நாயர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடன் இணைத்து பணியாற்றியது குறித்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

இது குறித்து அவர் கூறுகையில் ” நான் ஓ.பி.எஸ் அவர்களுடன் நிறைய நாட்கள் இணைத்து பணியாற்றியிருக்கிறேன். அவர் கட்சி விட்டு கட்சி மாறும் போது அவருக்கு தமிழ் எழுதுவதற்கு யாரோ ஒருவரின் மூலம் அழைப்பு எனக்கு வந்தது. அந்த வேலைக்காக நான் தினமும் காலி சென்றுவிட்டு மாலை அவரது வீட்டில் பணியாற்றிவிட்டு பின்னர் வருவேன். வர மிகவும் அமைதியான மனிதர் என்று கூறியுள்ளார் நடிகை ரேகா நாயர். இவர் இப்படி ஓ.பி.எஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.

Advertisement