டி.ராஜேந்தனால நான் அழாதே நாளே இல்ல – தனக்கு நேர்ந்த விஷயம் குறித்து பேசிய நடிகை ரேனுகா.

0
1195
- Advertisement -

டி. ராஜேந்திரனால் நான் அழாத நாளே கிடையாது என்று மனம் திறந்து சூர்யா பட நடிகை ரேணுகா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ரேணுகா. இவர் 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் இதுவரைக்கும் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் இவர் சின்னத்திரையில் நடித்தார். மேலும், பெண்கள் புரட்சி செய்யும் திரைப்படங்களிலும், முன்னணி நடிகர்களின் அம்மாவாகவும் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களாக இருந்தாலும் சரி, சீரியல்களாக இருந்தாலும் சரி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். பலரும் இவருடைய நடிப்பை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். தற்போதும் இவர் படங்களிலும் சீரியலிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகை ரேணுகா அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ரேணுகா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், தன்னுடைய ஆரம்ப கால சினிமா சினிமா பயணம் குறித்து கூறியது, நான் எப்படி ஒரு நடிகையாக மாறினேன் என்பதை நினைத்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது. என்னுடைய சொந்த ஊர் ஸ்ரீரங்கம். அப்பா ஒரு அட்வகேட். ஒரு நாள் அவர் திடீரென்று இறந்து விட்டார். அவருடைய இறப்பிற்கு பின் சூழ்நிலை காரணமாக நாங்கள் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டோம். அங்கே கிடைக்கும் வேலையை செய்து கொண்டு வந்தோம்.

சினிமா பயணம்:

பிறகு தான் நான் கோமல் சுவாமிநாதனின் குழுவில் நாடகக் கலைஞராக வேலைக்கு சேர்ந்தேன். இருந்தாலும், நான் பிஏ பொருளாதாரம் முடித்திருக்கிறேன். அந்த காலத்தில் தமிழ் நடிகைகள் என்றால் பெரிய அளவு வரவேற்பு கிடையாது. நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் டி ராஜேந்திரன் அவருடைய திரைப்படத்திற்கு கதாநாயகி தேடிக் கொண்டிருந்தார். பின் நான் அவர் இயக்கிய சம்சார சங்கீதம் படத்திற்கு செலக்ட் ஆனேன். அந்த படம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் போனது.

-விளம்பரம்-

டி ராஜேந்திரன் குறித்து சொன்னது:

ஆனால், டி ராஜேந்திரன் கண்ணா பின்னான்னு திட்டுவார். டயலாக் வரவில்லை என்றால் வைங்க என்று கடுமையாக திட்டிக்கொண்டே இருப்பார். அந்த நேரத்தில் நான் ஒவ்வொரு நாளும் அழுதது தான் அதிகம். ஏன்னா, இப்ப இருக்கிற மாதிரி அப்பெல்லாம் டிஜிட்டல் கிடையாது. அப்போது பக்கத்திலேயே கிர் என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். குறிப்பாக, ராஜேந்திரன் சார் டயலாக் ஒரு முறை இருக்கும். அதே டயலாக் மறுமுறை வராது. அப்படி கஷ்டப்பட்டு பேசி முடித்து கடைசி நேரத்தில் பார்க்கும்போதுதான் எனக்கே கஷ்டமாக இருந்தது தெரியும்.

முதலில் நடித்த விளம்பரம்:

இதைவிட கூட கொஞ்சம் நல்லா நடித்து அழகா பேசி இருக்கலாம் என்று தோணுச்சு. ஆனால், அப்போ படமே முடிஞ்சு போனது. ஆனால், டி ராஜேந்திரன் சார் வேற லெவல் குரு தான். அவரை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுப்பார். அதற்கு முன்பு நான் எட்டு வருடங்களாக நாடகங்களில் நடித்திருந்தேன். எனக்கு பட்டர்பிளை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான்தான் பட்டர்பிளையில் முதன் முதலாக நடித்தேன். இப்போதும் என்னுடைய போட்டோ தான் அந்த விளம்பரத்தில் இருக்கிறது. அது எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement