தேவர் மகன் படத்திற்கு பின் 39 ஆண்டுகள் கழித்து ரேவதிக்கு கிடைத்த உயரிய விருது.

0
240
revathi
- Advertisement -

39 ஆண்டுகளுக்குப் பிறகு ரேவதி கிடைத்த விருது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா. இவர் கேரளாவை பூர்விமாக கொண்டவர். பின் நடிகை ரேவதி அவர்கள் 1981 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் “மண்வாசனை” என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரேவதி அவர்கள் ஹிந்தி, ஆங்கில மொழி திரைப் படங்களை கூட இயக்கி இருக்கிறார். பின் நடிகை ரேவதி அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் ரேவதி அவர்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

- Advertisement -

ரேவதி பற்றிய தகவல்:

அதன் பின் 27 ஆண்டு காலமாக இவர்களுடைய வாழ்க்கையில் குழந்தை எதுவும் இல்லாததனால் தான் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்தார்கள் என்றும் கூறுகிறார்கள். மேலும், இவர்கள் இருவருக்கும் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்து இருந்தது. இந்நிலையில் நடிகை ரேவதி அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

ரேவதி குழந்தை:

அந்த குழந்தைக்கு தற்போது 8அல்லது 9 வயது இருக்கும். கடந்த 2018 ஆம் ஆண்டு தனக்கு 5 வயது பெண் குழந்தை இருப்பதாக ரேவதி அறிவித்து இருந்தார். அப்போது அவருக்கு வயது 52. அதாவது விவாகரத்துக்கு பின் 47 வயதில் ரேவதி குழந்தையை பெற்று இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ரேவதி அவர்கள் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை சீரியலில் கூட இவர் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ரேவதி நடித்த மலையாள படம்:

மேலும், இவர் சமீப காலமாக அழுத்தம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் முப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரேவதி கிடைத்த விருது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், 1983 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த ‘கட்டத்தே கிளிக்கூடு’ என்ற மலையாள திரை படத்தில் ஆஷா என்ற கதாபாத்திரத்தில் ரேவதி அறிமுகமாகியிருந்தார்.

ரேவதிக்கு கிடைத்த விருது:

பின் முப்பத்தி ஒன்பது வருடங்கள் கழித்து அதே மலையாள திரையுலகில் பூத காலம் என்ற படத்தில் ஆஷா என்ற கதாபாத்திரத்தில் ரேவதி நடித்தார். இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கேரள அரசின் விருதைப் பெற்றிருக்கிறார் ரேவதி. அதுமட்டும் இல்லாமல் நடிகர் கமலஹாசன் நடித்த தேவர் மகன் என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் ரேவதி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement