ஏன் கல்யாணம் பண்ணேன்னு இருக்கு! நான் செஞ்ச பெரிய தப்பு இது தான் – மனம் திறந்த நடிகை ரேவதி

0
147
- Advertisement -

திருமண வாழ்கை பற்றி முதன் முதலாக மனம் திறந்த நடிகை ரேவதி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். இவர் 1981 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் “மண்வாசனை” என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் ரேவதி அவர்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

- Advertisement -

ரேவதி பற்றிய தகவல்:

அதன் பின் 27 ஆண்டு காலமாக இவர்களுடைய வாழ்க்கையில் குழந்தை எதுவும் இல்லாததனால் தான் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். பின் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். அதன் பின் நடிகை ரேவதிக்கு ஒரு குழந்தை பிறந்தது . இவர் தன்னுடைய 47 வயதில் குழந்தையை பெற்று இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ரேவதி அவர்கள் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை சீரியலில் கூட இவர் நடித்து இருக்கிறார்.

நடிகை ரேவதி பேட்டி:

மேலும், இவர் சமீப காலமாக அழுத்தம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய திரைப்பயணம் மற்றும் திருமணம் குறித்து ரேவதி கூறியிருந்தது, இயக்குனர் பாரதிராஜாவிடம் தான் நான் நடிக்க கற்றுக் கொண்டேன். அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருந்தார். அவர் இயக்கத்தில் வந்த மண்வாசனை என்ற படத்தின் மூலம் தான் நான் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன்.

-விளம்பரம்-

சினிமா பயணம் குறித்து சொன்னது:

ஸ்கூல் பாரதிராஜா என்றால் எனக்கு டிப்ளமோ படித்த ஃபீல் கொடுத்தது பாலசந்தர்தான். அவரிடம் ரொம்ப பிடித்த விஷயம், எந்த ஒரு டயலாக்கையும் நேருக்கு நேர் பேசும்படி எடுக்கவே மாட்டார். எதார்த்தமாக வீட்டில் நாம் எப்படி பேசிக் கொள்வோமோ அப்படித்தான் இருக்கும். என்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருந்தது வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் தான். இருந்தாலும் நான் முழுமையாக டான்ஸ் ஆடுகிறேன் என்று எனக்குள் நம்பிக்கை வந்தது புன்னகை மன்னன் படத்தில் தான்.

திருமணம் குறித்து சொன்னது:

சினிமாவில் மனது கஷ்டப்படுகிற அளவுக்கு சம்பவம் நடந்ததா? என்று கேட்டால் இல்லை என்று சொல்வேன். ஒரே ஒரு விஷயத்தை நினைத்து இப்பவும் நான் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். அது என்னுடைய கல்யாணம். நான் ஒரு நாலு வருஷம் கழித்து திருமணம் செய்திருக்கணும். 17 வயதில் சினிமாவில் நடிக்க வந்தேன். 20 வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டேன். அந்த நேரத்தில் புன்னகை மன்னன், மௌன ராகம் படங்கள் எல்லாம் நடித்திருந்தேன். கல்யாணத்திற்கு பிறகும் ஒரு வருடம் நடிக்காமல் இருந்தேன். அதற்கு பிறகுதான் கிழக்கு வாசல், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்தேன். மக்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். நல்ல நல்ல படங்கள் நிறைய பண்ண ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு கல்யாணம் பண்ணி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement