வெளிநாட்டு கணவர், நிறைமாத கர்ப்பம் – அடையாளம் தெரியாமல் மாறிய ஒஸ்தி பட நடிகை.

0
5039
Richa-gangopathyay
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘லீடர்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ராணா டகுபதி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகைகள் ப்ரியா ஆனந்த், ரிச்சா கங்கோபாத்யாய் என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். இது தான் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் ஹீரோயினாக அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து வெங்கடேஷின் ‘நாகவள்ளி’ மற்றும் ரவி தேஜாவின் ‘மிராபகே’ என இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தார் ரிச்சா கங்கோபாத்யாய். அதன் பிறகு தெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார்.

- Advertisement -

2011-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘மயக்கம் என்ன’. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரியானார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தினை பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்திருந்தார். படத்தில் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

Richa Langella announces pregnancy on social media | Tamil Movie News -  Times of India

திருமணத்திற்க்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட ரிச்சா, தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இப்படி ஒரு நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் அதாவது அடுத்த மாதம் குழந்தை பிறக்கவிருக்கும் ரிச்சாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement