மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் மீது பாடகி சுசித்ரா சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த சர்ச்சை தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்து விசாரணையும் நடத்தி இருந்தார்கள்.
அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கை:
இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் குறிப்பாக கேரவனில் கேமரா வைத்து பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்தது தொடர்பாக நடிகை ராதிகா அளித்த பேட்டி மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த நிலையில் மலையாள நடிகை குறித்து சுசித்ரா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சின்மயி பிரபலங்களைப் பற்றி பாடகி சுசித்ரா கூறி வரும் விஷயங்கள் அதிருப்தியை கொடுத்திருக்கிறது.
சின்மயி குறித்த தகவல்:
சமீபத்தில் கூட இவர் பிரபல நடிகர் வீட்டில் மது பார்ட்டி நடப்பதாகவும், அங்கு போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரீமா குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சுசித்ரா, மலையாள திரைப்பட நடிகை ரீமாவும், அவருடைய கணவர் இருவருமே சேர்ந்து அவர்களுடைய வீட்டில் போதை பார்ட்டிகளை நடத்தி வருகிறார்கள். இந்த போதை பார்ட்டில் பல இளம் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள் என்றெல்லாம் கூறி இருந்தார்.
நடிகை ரீமா அளித்த பேட்டி:
இதற்கு நடிகை ரீமா பேட்டியில், பாடகி சுசித்ரா ஏன் இப்படிப்பட்ட ஒரு செய்தியை சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. அடிப்படையில் எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் சொல்லக்கூடாது. வெறும் பப்ளிசிட்டிக்காக மட்டும் அவர் இப்படி செய்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். என்னை பற்றியும் என்னுடைய கணவரை பற்றியும் அவதூறாக பேசியதற்கு கண்டிப்பாக இந்த விஷயத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பேன். சிறப்பு விசாரணைக் குழுவிடம் தற்போது புகார் கொடுத்திருக்கிறேன். அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டிஸ் ஒன்றும் அனுப்ப இருக்கிறோம். அனைத்தையும் இனி சட்ட ரீதியாக நான் எதிர்கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.
ரீமா குறித்த தகவல்:
தமிழில் கோ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் ரீமா நடித்திருந்தார். அதற்குப் பின் இவர் யுவன் யுவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். அதனை தொடர்ந்து இவர் சித்திர செவ்வானம் போன்ற சில படங்களில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை, அதனை அடுத்து இவர் மலையாளத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக பயணித்து வருகிறார். மேலும், இவர் இணை தயாரிப்பாளராக நிறைய படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது இவர் நடிப்பு, நடனம், தயாரிப்பு என்று பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.