பட வாய்ப்புகள் இல்லை..!தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தமிழ் நடிகை..!

0
472
Thukku

தமிழ் சினிமாவில் நடிகர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்கதை ஆகிவருகிறது. அதில் பெரும்பாலும் நடிகைகள் தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் பட வாய்ப்புகள் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

riyamika

தமிழில் துணை நடிகையாக நடித்து வந்த 26 வயதான நடிகை ரியாமிகா. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.வலசரைவாக்கம் ஸ்ரீதேவிகுப்பத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற ரியாமிகா மறுநாள் காலை நெடு நேரம் ஆகியும் கதவை திறக்காததால் பின்னர் ஜன்னல் வழியாக அவரது உறவினர் எட்டி பார்த்துள்ளனர்.அப்போது ரியாமிகா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். படவாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் உச்சக்கட்ட விரக்திக்கே போய் இப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.