அதுவும் விவசாயி செய்றது தான். அத சாப்பிடுவீயா சச்சின் – நடிகை ரோகிணி பளீர்.

0
6401
sachin
- Advertisement -

விவசாய போராட்டம் குறித்து சச்சின் செய்த டீவீட்டுக்கு பிரபல தமிழ் நடிகையான ரோஹிணி கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

-விளம்பரம்-

விவசாயிகள், போலீசாருக்கு இடையே நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே போல விவசாயிகள் போராட்டத்தில் சில கலவரவாதிகள் புகுந்ததால் தான் போராட்டம் கலவரலாமாக காரணம் என்றும் விவசாயிகள் சிலர் கூறி இருந்தனர். இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு ஆதரவராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : உள்ளாடையில் எல்லை மீறிய படு கிளாமர் போஸ் கொடுத்த பிக் பாஸ் புகழ் ரேஷ்மா.

- Advertisement -

இந்த நிலையில் சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து பிரபல சர்வதேச பாடகியான ரிஹானா, சர்வதேச ஆபாச நடிகை மியா கலீபா என்று பலர் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர். இந்த நிலையில், ரிஹானா, மியா கலீபா க்ரேட்டா தன்பெர்க் பதிவுகளுக்கு எதிராக பாலிவுட்டில் இருந்தும் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் இருந்தும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் தன் பங்கிற்கு ட்வீட் ஒன்றை செய்து இருந்தார். அதில் ‘இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும், ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும்’ என்று பதிவிட்டு இருந்தார்.

சச்சினின் இந்த பதிவை அடுத்த பலரும் சச்சினுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரபல தமிழ் நடிகையான ரோகிணி, தனது முகநூல் பக்கத்தில் சச்சின் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘கிரிக்கெட் மட்டையை சாப்பிடுவியா சச்சின்? அதுவும் ஒரு விவசாயி வளர்த்த மரத்தில் இருந்து தான் வந்தது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகை ரோகினியின் இந்த பதிவுக்கு வழக்கம்போல் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement