ரெண்டு முறை வாய்ப்பு வந்தும் அந்த ரஜினி படத்துல நடிக்க முடியல – அத நெனெச்சி அழுது இருக்கேன் – நடிகை சதா வேதனை.

0
1121
sadha
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு ரவுண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட எத்தனையோ நடிகர் நடிகைகள் சினிமாவில் அட்ரஸ்ஸே இல்லாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக திகழ்ந்த சதாவும் ஒருவர். தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித்,மாதவன் என்று முன்னனி நடிகர்களுடன் நடித்துவந்தார். பல புது முக நாயகிகளின் வருகையால் பட வாய்ப்பை இழந்த சதா கடைசியாக வடிவேலு நடித்த ‘எலி ‘ படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

-விளம்பரம்-
sadha

அந்த படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடையில் எதிர் பார்த்த அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் போக தொலைக்காட்சி பக்கம் சென்ற சதா, தி ஜூனியர்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்றார். ஆனால், அங்கும் நிலைத்து நிற்க முடியவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதையும் பாருங்க : 7வயதில் காமராஜருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த காமெடி நடிகர் – 90ஸ் கிட்ஸ் கண்டுபுடிச்சிட்டு இருப்பீங்களே ?

- Advertisement -

இறுதியாக நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விலை மாதுவாக நடித்து இருந்தார். ஜெயம் ரவி, விக்ரம், மாதவன் என்று பலருடன் நடித்த சதா, சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இரண்டு முறை வாய்ப்பு வந்தும் அதை தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். அதுவும் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான ‘சந்திரமுகி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள சதா, சந்திரமுகி படத்தில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சதா. சந்திரமுகி படத்தில் மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்ததாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement