7வயதில் காமராஜருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த காமெடி நடிகர் – 90ஸ் கிட்ஸ் கண்டுபுடிச்சிட்டு இருப்பீங்களே ?

0
11002
kama
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் செந்தில், கவுண்டமணி காமெடிக்கு பின்னர் வந்த எத்தனையோ 90ஸ் காலகட்ட காமெடி நடிகர்களின் காமெடிகளை தற்போதும் மறக்க முடியாது. வடிவேலு விவேக்கை அடுத்தது தமிழ் சினிமாவில் வந்த சார்லி, தாமு, சின்னி ஜெயந்த், வையாபுரி போன்ற பல காமெடி நடிகர்களின் காமெடி பற்றி 90ஸ் ரசிகர்கள் மட்டுமே அறிவர். அப்படி நீங்கள் 90ஸ் ரசிகராக இருந்தார் இந்நேரம் இந்த புகைப்படத்தில் காமராஜருடன் இருக்கும் சின்னி ஜெயந்தை கண்டுபிடித்து இருக்கணுமே.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் சின்னி ஜெயந்த்தும் ஒருவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பல குரலில் பேசும் கலைஞர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தி – கடுப்பாகி சின்மயி வெளியிட்ட பதிவு.

- Advertisement -

இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகர் சின்னி ஜெயந்துக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சித்தார்த் ஜெயநாத், ஸ்ருஜன் ஜெய்நாத் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு தான் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருஜன் ஜெய், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். அதிலும் முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் 75 ரேங்கில் அவர் தேர்ச்சி பெற்று இருந்தார்.

நடிகர் சின்னிஜெயந்த் அவர்கள் சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நிறைய ஆர்வம் கொண்டவர். உண்மையான தெய்வ வழிபாடு இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவர்.அந்தந்த நாளுக்குரிய தெய்வத்தை சென்று வழிபடுவது தான் இவரின் வழக்கம், அதிலும் இந்து முஸ்லிம் கிறிஸ்ட்டின் என்று எந்த மத பாகுபாடு பார்க்காமல் அனைத்து கோவிலுக்கும் சென்று வழிபடுவார்.

-விளம்பரம்-
Advertisement