மார்க் கம்மியா எடுத்ததால என் குடும்பத்திலும் ஒரு தற்கொலை நடந்துச்சு – சாய் பல்லவி கொடுத்த ஷாக்.

0
3425
sai
- Advertisement -

நீட் தேர்வினால் இளம் வயதில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. நான் எப்போதும் மாணவர்கள் பக்கம் தான் என்று சாய் பல்லவி ஓபன் டாக் கொடுத்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக கொண்டு வந்த தேர்வு தான் நீட். இதை பாஜக அரசு தமிழ்நாட்டில் கட்டாயப்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாட்டில் பல மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கியும், போர் குரல்கள் கொடுத்தும் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், முழுமையான சட்டப் போராட்டம் நடத்தி இந்த நீட் தேர்வை விலக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. அதிமுக அரசின் பொறுப்பில்லாத தனத்தினால் தான் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-
Is the Indian actress Sai Pallavi a real doctor? - Quora

நீட்தேர்வு என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கையில் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி கொண்டு இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பும், எழுதிய பின்பும் மாணவர்கள் நிறைய மன உளைச்சலில் இருக்கின்றன. இந்த நிலையில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சாய் பல்லவி சமீபத்தில் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

இதையும் பாருங்க : படகில் கஞ்சா கடத்தல் – சுற்றி வளைத்த அதிகாரிகள், தலைமறைவான யூடுயூப் பிரபலம் நாகை மீனவன் (யார நம்பறது இந்த காலத்துல)

- Advertisement -

அதில் அவர் நீட் தேர்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, மருத்துவப் படிப்பு என்பது கடல் போன்றது. தேர்வில் கேள்விகள் எல்லாம் எங்கே இருந்து வரும் என்று யூகிக்க முடியாது. இதனால் மனதளவில் பல பாதிப்புகள் ஏற்படும். இதற்காக பெற்றோர்களும் நண்பர்களும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். என் குடும்பத்தில் கூட குறைவாக மார்க் எடுத்து அதன் காரணமாக ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார். தற்கொலை செய்து கொள்வது அவரவர் குடும்பத்தை ஏமாற்றும் செயலாகும்.

தயவுசெய்து தற்கொலையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று ஈசியா என்னால் சொல்ல முடியும். ஆனால், அந்த இடத்தில் இருப்பவர்களுக்குத் தான் அந்த வலியும் மன நிலையும் புரிந்து கொள்ள முடியும். பதினெட்டு வயது கூட ஆகாத மாணவர்கள் சிறு வயதிலேயே தற்கொலை செய்துகொள்வது மிகவும் வேதனைக்குரிய விஷயம். இந்த எண்ணத்தில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டும். மன வேதனைகள் உடன் எந்த பாடங்கள் படித்தாலும் மனதில் நிற்காது. உற்சாகத்துடன் படிக்க வேண்டும். எப்போதும் நான் மாணவர்கள் பக்கம் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement