நடிகை சாக்ஷி அகர்வால் போட்டு இருக்கும் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி சம்பத்தை பகிர்ந்து இருந்தார். அதில் அவர், நான் வெஜ் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால், எனக்கு non veg தான் வந்தது. நான் ஆர்டர் செய்த உணவில் பன்னீருக்கு பதில் சிக்கன் இருந்தது. உடனடியாக நான் அதை தூக்கி போட்டு விட்டேன். இதற்கு swiggy தான் பொறுப்பேற்க வேண்டும். என் நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி என்று கூறி இருந்தார்.

இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் உருவானது. சிலர் சாக்ஷி அகர்வாலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் கொடுத்து நடிகை சாக்ஷி அகர்வால் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், சில தினங்களுக்கு முன்பு நான் வெஜ் பன்னீர் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால், எனக்கு வந்தது சிக்கன்தான். நான் என்னுடைய வாழ்நாளில் non veg சாப்பிட்டதே கிடையாது.
சாக்ஷி அகர்வால் வீடியோ:
ஆர்டர் வந்த உணவை திறந்த போது ஒரு மோசமான வாசம் வந்தது. என் வாழ்க்கையில் நான் அந்த மாதிரியான மணத்தை அனுபவித்ததே கிடையாது. எடுத்து சாப்பிட்டு பார்த்தேன். அதனுடைய சுவையும் வித்தியாசமாக இருந்தது. அதற்கு பிறகு தான் அது சிக்கன் என தெரிந்தவுடன் எனக்கு வாந்தி வந்துவிட்டது. மேலும், இது குறித்து நான் வைத்த குற்றச்சாட்டு அசைவம்- சைவம் உண்பவர்களுக்கு இடையோ, இந்துக்கள்- இந்து அல்லாதவர்கள் இடையே கிடையாது.
View this post on InstagramA post shared by AdminSakshiAgarwal (@admin_sakshiagarwalofficial)
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
வாடிக்கையாளர்களுக்கும் மோசமான வாடிக்கையாளர் சேவைக்குமான பிரச்சனை தான். உணவு என்பது ஒருவரின் தனி உரிமை. அதில் அசைவம் சாப்பிடாதது என் உரிமை. உணவு என்பது நம் உணவு மட்டுமில்லாமல் நம்பிக்கை, கலாச்சாரம், அதன் உணர்வுகளையும் சார்ந்தது என்பதால் தான் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறியிருந்தேன் என்றுகிறார். மேலும், சாக்ஷி அகர்வால் அவர்கள் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்து இருந்தார்.

சாக்ஷி அகர்வால் குறித்த தகவல்:
பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் இவர் முதன் முதலில் ராஜா ராணி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ஆனால், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது காலா படத்தின் மூலம் தான். இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஸ்வாசம், அரண்மனை 3 உள்ளிட்ட படத்தில் நடித்து இருந்தார். அதற்க்கு பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார்.






