அவங்க அதிக சம்பளம் கேட்டா ஒன்னும் சொல்ல மாற்றங்க, இதே நாங்க கேட்டா பிரச்சனையாகிடுது – புலம்பிய சமந்தா.

0
948
samantha
- Advertisement -

நடிகைகளின் சம்பளம் குறித்து நடிகை சமந்தா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் 11 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
சமந்தா

திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் தனது சினிமா பயணத்தின் 11 வது ஆண்டு நிறைவு பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதையும் பாருங்க : கண்ணாடி முன்பு ஜிம் உடையில் செல்ஃபி – பாபநாசம் மீனு குட்டியா இப்படி ஒரு போஸில்.

- Advertisement -

நயன்தாராவை போலெ இவரும் பல்வேறு லீட் ரோல்களில் நடித்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘ஓ பேபி’ திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து சமந்தா தனது சம்பளத்தையும் உயர்த்தினார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சமந்தா, நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் 3 கதாநாயகிகளில் ஒருவராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் சம்பளம் குறைவுதான்.

samantha

அந்த நடிகை வாங்கும் சம்பளம் முதல் 20 நடிகர்கள் பட்டியலில் கூட இல்லாத கதாநாயகர் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. நடிகைகள் தங்களுக்கு சம்பளம் அதிகம் வேண்டும் என்று கேட்டால் பிரச்சினையாக்குகின்றனர். ஆனால் நடிகர் சம்பளம் அதிகம் கேட்டால் உடன்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார் சமந்தா.

-விளம்பரம்-
Advertisement