தந்தையில்லாமல் 7 பேரை காப்பற்றி வந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் – கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய சமந்தா.

0
574

தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் தனது சினிமா பயணத்தின் 11 வது ஆண்டு நிறைவு பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது தமிழை விட அம்மணி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தான் படு பிரபலம்.

இதையும் பாருங்க : கர்பமாக இருக்கும் வேளையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை சமீரா.

- Advertisement -

இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் குடும்பத்தைக் காப்பாற்றவே ஆட்டோ ஓட்டி வருவதாகவும் சமந்தாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தனக்கு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை கேட்டு தெரிந்து கொண்ட சமந்தா உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் சொன்னபடியே நடிகை சமந்தா அந்த பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.12.5 லட்சம் செலவில் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். 7 சகோதரிகள் உடன் குடும்பத்தை நடத்துவதற்கே கஷ்டப்பட்டு வந்த ஏழை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சமந்தா செய்த இந்த மிகப்பெரிய உதவி பலரது பாராட்டை பெற்றுவருகிறது.

-விளம்பரம்-
Advertisement