7 ஆண்டுக்கு முன் சோம் சேகருடன் டின்னர் சாப்பிட்டுள்ள ஜூலி – சோம் சேகர விடுங்க ஜூலி எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
917
som

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த சீசனில் பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர் என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் சோம் சேகர் கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அதே போல இவர் பா பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2, சூரரை போற்று போன்ற படங்களில் கூட சைட் ஆர்ட்டிஸ்ட்டாக தலை காண்பித்துள்ளார்.

இதையும் பாருங்க : தந்தையில்லாமல் 7 பேரை காப்பற்றி வந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் – கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய சமந்தா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்னர் சோம் சேகர், ஜூலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ஜூலி தனது இஸ்னாட்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க பிக் பாஸ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து ஒரு புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை விஜய் டிவி துவங்க இருக்கிறது.சரி, என்ன நிகழ்ச்சி ? நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் ? என்ற கேள்வி எழுகிறதா ? வேறு ஒன்றும் புதுமையான நிகழ்ச்சி இல்லை. விஜய் டிவியில் பல ஆண்டுகள் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியை தான் தற்போது பிக் பாஸ் பிரபலங்களை வைத்து துவங்க இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு ‘பிக்பாஸ் ஜோடி’ என்று பெயர் வைத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 1 முதல் 4 வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.இதுவரை சோம், கேபி, ஆஜித், ஷிவானி, பாலா, ஜூலி, சென்றாயன், மகத், யாஷிகா ஆனந்த், ஷாரிக், பாத்திமா பாபு, மும்தாஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் உறுதியாகியுள்ளார்களாம். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகர் ஜீவாவும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்

-விளம்பரம்-
Advertisement