தன்னுடைய கணவரை குறித்து முதன்முதலாக மனம் திறந்து சமந்தா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். கடந்த ஆண்டு தான் இவர் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இவரே தயாரிக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இந்த படம் வருகிற மே 15ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது.
சமந்தா பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சமந்தா கூறியிருந்தது, நான் விவாகரத்து என்ற சூழலுக்கு தள்ளியபோது என்னை நானே முழுமையாக மறைத்துக் கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கி பழகுவதோ இனி சாத்தியமே இல்லை என்று தான் நினைத்தேன். இந்த நிலையில் தான் பிரபல இயக்குனரான ராஜியை சந்தித்தேன். அவர் என்னுடைய வாழ்க்கையில் இருப்பதால் நான் எப்போதும் ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன்.

கணவர் பற்றி சொன்னது:
அந்த அன்பையும் நட்பையும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு என்னுடைய மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போது நான் இருக்கும் உறவால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னில் ஏற்பட்ட இந்த நேர்மையான மாற்றத்தை என்னுடைய நெருங்கிய தோழிகளுமே கவனித்து கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா திருமணம்:
மேலும், சில மாதங்களாக சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால இவர்கள் இருவருடைய உறவு பற்றி சோசியல் மீடியாவில் காட்டு தீயை போல ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. மேலும், சமந்தாவுக்கும் ராஜ் நிடிமோருவுக்கும் கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் தான் திருமணம் செய்திருந்தார்கள். இது இவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணம்.






