பிரபல நடிகை சமந்தாவின் வாட்ச் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென் இந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பழமொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு வந்த தகவல் நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். சமீபத்தில் தான் இவர் குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த வகையில் தற்போது இவர் பாலிவுட் வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
சமந்தா திரைப்பயணம்:
பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருக்கிறார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருப்பதாக கூறப்படுகிறது . இந்த வெப் சீரியஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸை எடுத்திருக்கிறார். இந்தத் தொடர் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி, முதல் அமேசான் OTT தளத்தில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Citadel : Honey Bunny:
இதற்கிடையே சமந்தா அவர்கள், இந்த வெப் சீரிஸின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக சமந்தா தனது விருப்பமான வடிவமைப்பாளரும் நல்ல நண்பருமான க்ரேஷா பஜாஜ் வடிவமைத்த தங்க நிற ஆடையை அணிந்திருந்தார். அதோடு சமந்தாவின் தோற்றத்தின் சிறப்பம்சமாக இருந்தது, அவர் அணிந்திருந்த தங்க வளையல் கடிகாரம் தான். அந்த கடிகாரம் பல்கேரியில் இருந்து வாங்கப்பட்டதாகவும், அந்த கடிகாரத்தின் விலையில் ஒரு சொகுசு காரே வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சமந்தாவின் வாட்ச் குறித்து:
மேலும், பல்கேரியில் வாங்கப்பட்ட அந்த கடிகாரத்தின் பெயர் ‘ Serpenti Tubogas Watch’ என்று கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான பல்கேரி இணையதளத்தில் கிடைக்கின்றதாம். தங்கம் மற்றும் வைரத்தால் ஆன அந்த வாட்சின் விலை 45, 47, 000 ரூபாயாம். தற்போது சமந்தா அந்த கடிகாரத்தை அணிந்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில் நிலையில், அந்த வாட்ச்சின் விலை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமந்தா திருமணம்:
இதனிடையே நடிகை சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம் நடக்க இருக்கிறது.