தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் பாருங்க : இரண்டாம் சீசனில் யாஷிகா, மூன்றாம் சீசனில் அபிராமி - நான்காவது சீசனில் இருந்து முரட்டு சிங்கள் நிகழ்ச்சிக்கு சென்றவர் இவர் தான்.
இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம்.
https://twitter.com/Mysteri13472103/status/1354048659369775104
அந்த வகையில் சமீபத்தில் இவர், தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவ் சாட்டில் பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் வரும் ட்ரோல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. அவர்கள் எனக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், இப்போது எனக்கு சிரிப்பாக இருக்கிறது. மேலும், நான் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளேன் என்பதை தான் காட்டுகிறது என்று தான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.





