தமிழ் தொலைக்காட்சிகள் பலவும் என்னதான் சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வந்தாலும் அடிக்கடி ஏதாவது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்பி கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் விஜய் டிவியில் எண்ணற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் முரட்டு சிங்கிள் என்ற ஒரு வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சி தற்போது இரண்டாம் சீசன் சென்று கொண்டிருக்கிறது. ஆண்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள பெண்கள் இதில் நடுவர்களாக இருக்கிறார்கள். மேலும், எந்த ஒரு ஆண் அதிகப்படியான நடுவர்களை கவர்ந்து வெல்கிறாறோ அவரே முரட்டு சிங்கிள் டைட்டில் வின்னர் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் அம்சம்.
கடந்த ஜனவரி 3ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக குட்டி கோபி, சாம் விஷால், இனியன், சில்மிஷம் சிவா, கிரண், ஜேம்ஸ், விஜய், ரகுநாத், அபிஷேக் ஆகிய 10 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருந்தார்கள். அதேபோல நடுவர்களாக ஆயுத எழுத்து சீரியல் புகழ் ஸ்ரீத்து கிருஷ்ணன் செந்தூரப்பூவே ஸ்ரீநிதி, விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின், பிக்பாஸ் புகழ் அபிராமி, நடிகை மாயா, பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் என்று பலர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.
இதையும் பாருங்க : பிக் பாஸ் கொண்டாட்டத்தில் சனம் பங்கேற்கவில்லையா ? அனிதா சமபத் பதில்.
பொதுவாக இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் இருந்து ஒரு நடிகையை களம் இறக்கி விடுவார்கள். அந்த வகையில் இரண்டாவது சீசனில் இருந்து யாஷிகா கடந்த முரட்டு சிங்கிள் சீசனில் களமிறங்கினார். அதேபோல தற்போது அவர் நடுவராக தொடர்ந்து வரும் நிலையில் மூன்றாம் சீசனில் பங்குபெற்ற அபிராமியும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிக்பாஸில் நான்காவது சீசனில் இருந்து யாராவது ஒருவர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கேப்ரில்லா இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.
கேப்ரில்லா ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 7c சீரியலில் நடித்து இருந்தாலும் இடையில் இவரை விஜய் டிவியில் காணமுடியவில்லை. இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஒரு ரீ என்ட்ரி ஆக அமைந்து இருந்தது என்று கூட சொல்லலாம். அதேபோல பிக்பாஸில் பங்குபெறும் ஒருசில போட்டியாளர்களுக்கு தொடர்ந்து விஜய் டிவி வாய்ப்பளிக்கும் அந்த வகையில் இந்த முறை கேப்ரில்லாவை முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கொண்டுவந்துள்ளது விஜய் டிவி. ஒருவேளை இவர் நடுவராக தொடர்வாரா இல்லை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.