ஒரே மகளின் இரண்டாம் பிறந்தநாளை கொண்டாடிய சங்கவி – அப்படியே குட்டி சங்கவி மாதிரியே இருகாங்க பாருங்களேன்.

0
962
sangavi
- Advertisement -

நடிகை சங்கவி மகளின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் வியந்துபோய் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வந்த நடிகைகள் தற்போது செகண்ட் இன்னிங்ஸ்சில் வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் குடும்பம் பொறுப்பு சென்று விடுகிறார்கள். பின் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் நடிகை சங்கவியும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். நடிகை சங்கவி 1977ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் பிறந்தவர்.

-விளம்பரம்-

இவருடைய உண்மையான பெயர் காவியா ரமேஷ். இவருடைய பாட்டி ஒரு கன்னட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் தந்தை மருத்துவர் ஆவார். பின் சங்கவி தனது 16 வயதிலேயே அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த படமே இவருக்கு அறிமுக படமாக இருந்தது. அதன் பின்னர் இவருடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தார். இவர் 95 படங்களுக்கு மேல் நடித்தார்.

- Advertisement -

சங்கவி நடித்த படங்கள்:

அதுமட்டும் இல்லாமல் விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், கமல், சரத்குமார், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சங்கவி நடித்து இருக்கிறார்.90 காலகட்டத்தில் சினிமா உலகில் சங்கவி ஒரு ரவுண்ட் வந்தார் என்றே சொல்லலாம் . மேலும், இவர் அஜித்துடன் அமராவதி, விஜயுடன் கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா உள்ளிட்ட பல படங்கல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சங்கவி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

சங்கவி நடித்த சீரியல்கள்:

அதுமட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருந்தார். இவர் கோகுலத்தில் சீதை, சாவித்ரி, காலபைரவன் ஆகிய சீரியல்களிலும் சங்கவி நடித்து உள்ளார். பின் சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் சங்கவி தொகுத்து வழங்கி இருக்கிறார். இப்படி திருமணம் செய்யாமல் 22 வருடங்கள் சினிமாவில் மட்டுமே காலத்தை கழித்தார் சங்கவி. பின் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 39 வயதில் ஒரு ஐ.டி கம்பெனி ஒனர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

சங்கவி குடும்பம் பற்றிய விவரம்:

பின் தனது 42 வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சங்கவி. இவர் திருமணத்திற்கு முன் கடைசியாக 2010ல் இந்திராணி என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். பின் திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சங்கவி விலகி இருந்தார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சங்கவி சமுத்திரகனியுடன் இணைந்து கொளஞ்சி என்ற படத்தில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக இயக்குனர் தனராம் சரவணன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த கொலஞ்சி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சங்கவி சமுத்திரகனியின் மனைவியாக நடித்திருந்தார்.

சங்கவி மக்களின் புகைப்படம்:

இந்த படம் மகன், அப்பாவின் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த படம். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் போட்டோவை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்து பலரும் வியந்து போயிருக்கிறார்கள். ஏன்னா, சங்கவியின் மகள் பார்ப்பதற்கு அவரைப் போலவே அச்சு அசலாக இருக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் வியந்து லைக்ஸ்குகளையும், கமெண்ட்டும் போட்டு வருகிறார்கள்.

Advertisement