வெள்ளித்திரை, சின்னத்திரை கலக்கிய நடிகை சீமாவின் பிறந்தநாள் இன்று- குவியும் வாழ்த்துக்கள்

0
1574
Seema
- Advertisement -

வெள்ளித்திரை, சின்னத்திரையில் கலக்கிய நடிகை சீமாவின் பிறந்தநாள் அன்று பலரும் அறிந்திடாத சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கியவர் சீமா. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் குடியேறி விட்டார்கள். இவருடைய தந்தை சென்னையில் டிவிஎஸ் பார்சல் சர்வீஸ் பணிபுரிந்திருந்தார். சீமாவிற்கு ஏழு வயது இருக்கும்போது அவருடைய தந்தை தன்னுடைய மனைவி விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இதனால் சீமா தன்னுடைய தாயாருடன் வசித்து வந்தார். மேலும், சீமாவிற்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம். இதனால் இவர் தன்னுடைய 13 வயதில் லிசா பேபி இயக்கத்தில் வெளிவந்த நிலவே நீ சாட்சி என்ற படத்தில் நடனம் ஆடி தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அது மட்டும் இல்லாமல் சீமாவும் கமலஹாசனும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். சொல்லப்போனால் சீமாவிற்கு நடனத்தை கற்றுக் கொடுத்தது கமலஹாசன் தானாம்.

- Advertisement -

சீமா திரைப்பயணம்:

அதன் மூலம் தான் அவருக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் மலையாளத்தில் தன்னுடைய 19 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஐ வி சசிதான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இவர் மலைச்சாரல், கைவரிசை, பகலில் ஒரு இரவு, காளை, பகவதி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சீமா நடித்த சீரியல்கள்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இவருக்கு தமிழை விட மலையாளத்தில் தான் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு கிடைத்திருக்கிறது. பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த உடனே இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான தங்கம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், வம்சம், செம்பருத்தி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சீமா அளித்த பேட்டி:

இதனிடையே நடிகை சீமா அவர்கள் மலையாள திரைப்பட இயக்குனர் சசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுமிலன் என்ற மகளும் அனிசசி என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களுடைய குடும்ப வாழ்க்கையும், சினிமா பயணமும் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது சீமாவின் கணவர் சசி திடீரென்று உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த சீமா சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பின் சமீபத்தில் நடிகை சீமா தன்னுடைய கணவர் குறித்து பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், சினிமா பற்றி எனக்கு எந்த ஒரு தெளிவும் கிடையாது.

சீமா பிறந்தநாள்:

என்னை கதாநாயகியாக நடிக்க வைத்தவர் என்னுடைய கணவர் தான். சினிமாவைப் பற்றி உணர வைத்ததும் அவர்தான். நான் நன்றாக பேசுவேன் என்பதால் என்னுடைய கணவர் என்னை பேச சொல்லி ரசிப்பார். அவர் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவர் முதன்மையானவர். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும் ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டேன். இருந்தும் அவர் என்னை விட்டு சென்றுவிட்டார். அவருடைய இழப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை. அவருடைய இழப்பிற்கு எனக்கு கொஞ்சம் அமைதி தேவைப்பட்டது. அதனால்தான் நான் நடிக்காமல் இருந்தேன். இனி நான் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று நடிகை சீமாவின் பிறந்தநாள். இதனால் சோசியல் மீடியாவில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement