அதுக்கு கூட அழுது அடம் பிடிச்சா தான் விடுவார் – பார்த்திபனுடன் வாழ்ந்த நாட்கள் குறித்து சீதா

0
7278
- Advertisement -

80களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடித்த ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜாநடை என பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. 80ஸ் காலகட்டத்தில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சீதா, இவருக்கு படங்களில் நேரம் ஒதுக்க முடியாத நிலையால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை கூட இவர் ஒதுக்கி இருக்கிறார். நடிகை சீதாவின் சினிமா வாழ்க்கை பாழாய் போனதற்கு முக்கிய காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான்.

-விளம்பரம்-

ஆண் பாவம் படத்திற்கு பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் நடித்தார் சீதா. அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், சீதாவின் வீட்டில் இவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளாததால் வீட்டை விட்டு வெறியேறினார். சீதாவிற்கும் நடிகர் பார்த்திபனுக்கும் கடந்த 1989 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. நடிகை சீதா திருமணத்திற்கு பின் நடிப்பதில் பார்த்திபனுக்கு பிடிக்கவில்லை.

- Advertisement -

இதனால் பிசியாக நடித்து வந்த சீதா திருமணத்திற்கு பின் 10 வருடங்கள் சினிமாவை விட்டுவிட்டார். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். மேலும், ஒரு மகனை தத்தெடுத்து வளர்ந்தனர். அதன்பின்னர் 10 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சீதா பார்த்திபன் குறித்து பேசுகையில் ‘பார்த்திபன் ரொம்ப ஸ்ரிக்ட்.

வெளியிலே விடமாட்டார். குழந்தைக்கு எக்ஸாம் இருக்கு அதை பாரு என்று சொல்லிவிடுவார். அதன்பிறகு அழுது அடம் பிடித்து சொல்வேன். அழுதபிறகுதான் விடுவார். ஆனால் அவருடன் இருந்த ஒவ்வொரு நானும் நான் மகிழ்ச்சியாகதான் இருந்தேன்’ என்று நடிகை சீதா கூறியுள்ளார். பார்த்திபனை பிரிந்த பின்னர் 10 வருடங்கள் சினிமாவில் பிரேக் எடுத்த சீதா பின் 2002 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்கத் துவங்கினார்.

-விளம்பரம்-

வயதாகி விட்டதால் இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சீரியலிலும் நடிக்கத் துவங்கினார் சீதா. இப்படி தனது இரண்டாம் இன்னிங்சை கஷ்டப்பட்டு துவங்கிய சீதா மீண்டும் 2010 ஆம் ஆண்டு சதீஷ் தனது 43 ஆம் வயதில் சீரியல் நடிகர் சதீஷ் சதீசுடம் காதல் மலர்ந்துள்ளது. சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

எனக்கு துணை வேண்டும் என்பதற்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்ததை எண்ணி சந்தோஷப்படுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது என்பதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் சீதாவின் இரண்டாம் திருமணமும் சரியாக அமையவில்லை திருமணமான 6 ஆண்டுகளில் சதி செய்யும் விவாகரத்து செய்தார் செய்தார் . தற்போது தனது தாயுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் சீதா.

Advertisement