நடிகை ஷகிலா தனக்கு புகைப்பழக்கம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவர் தன்னுடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டியவர். இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார்.

பின், இவர் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் ஷகிலா நடித்திருந்தார். ஆனால், இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாளம் மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர். இளமைப் போன பின்னரும் இவர் பல படங்களில் நடித்திருந்தார்.
ஷகிலா குறித்த தகவல்:
கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஷகிலா ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி அவர் மீதான தவறான பிம்பத்தை மாற்றி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பலரும் அவரை ஷகிலா அம்மா என்று அழைக்க துவங்கி விட்டனர். அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஷகிலா பேட்டி:
இந்நிலையில் நடிகர் ஷகிலா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என அனைவரும் சொல்வார்கள். ஒரு சிலர் ஆந்திராவில் உள்ள நெல்லூரைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். ஆனால், நான் ஒரு சென்னை பொண்ணு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை கோடம்பாக்கத்தில் தான். நான் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதனால் என் தந்தை என்னை அடித்தார். ஒருமுறை இதைப் பார்த்து சிலர் அப்பாவை தடுக்க வந்தனர். அப்போதுதான் நடிக்க வருகிறீர்களா என்று கேட்டார்கள். அப்பாவும் சம்மதித்து எனக்கும் விருப்பம் இருந்ததால் நடிக்க வந்தேன்.
குடிப்பழக்கம் குறித்து ஷகிலா:
ஒருமுறை தெலுங்கு இயக்குனர் ஒருவர் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் என் விமானத்தை ரத்து செய்யும்படி கூறினார். நான் ஏன் என்று கேட்டதற்கு, ' எனது நண்பர்கள் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள்' நீங்கள் இங்கு இருந்தால் அனைவரும் சேர்ந்து குடிக்கலாம் என்றார். அப்போது நான் அந்நியர்களுடன் குடிப்பதில்லை என்று அவரிடம் கூறினேன். அப்போது அவரிடம் வாங்கி இருந்த, அடுத்த படத்தின் அட்வான்ஸை கொடுத்துவிட்டு, 'அட்வான்ஸ் வாங்கியதால் நான் குடிக்க போகிறேன்' என்று நினைக்காதீர்கள் என்று கூறினேன்.

புகைப்பிடிக்கும் பழக்கம்:
மேலும், ஒருமுறை எழும்பூரில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது பாலிவுட் நடிகை பூஜா பட்டின் படமும், என்னுடைய படமும் ஒரே இடத்தில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அதனால் அவர்களைப் பார்க்கச் சென்றேன். அவர் ஒரு சிறிய அறையில் வந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அந்த அறை முழுவதும் சிகரெட்டுகள் இருந்தன. அப்போது அவர், தன் தந்தை முன் கூட சிகரெட் பிடிப்பேன் என்றார். மேலும், அவர் எனக்கு சிகரெட் பிடிக்குமா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். ஆனால், அவர் என்னை அழைத்து புகை பிடிக்க கற்றுக் கொடுத்தார் . அந்தப் பழக்கம் இன்னமும் எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.






