தெலுகு சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஹீரோவான விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட்டது. ஆனால், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டேவிற்கு இணையாக வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை என்பது தான் ராசிகர்களின் கருத்து. அந்த அளவிற்கு அந்த படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் ஷாலினி பாண்டே.
பப்லியான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய முகம் என்று தெலுங்கு சினிமாவில் நியூ எண்ட்ரியாக வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகமாக துவங்கியது.மேலும், ஜி வி பிரகாஷுடன் ‘100% காதல்’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது.
இதையும் பாருங்க : உடல் எடையை குறைத்து மீண்டும் படு ஸ்மார்ட்டாக மாறிய வினய் – இந்த படம் இவருக்கு ரீ – எண்ட்ரியாக அமையுமா ?
தொடர்ந்து படத்தில் நடித்து வந்தாலும் அம்மணிக்கு ஹீரோயின் கதாபாத்திரம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. அதே போல சமீப காலமாக உடல் எடையை குறைத்து வருகிறார். இவர் உடல் எடையை குறைத்ததில் இருந்து உருவக் கேலிக்கு ஆளானார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலினி பாண்டே உடல் எடை குறைத்த காரணம் குறித்தும் உடல் கேலி குறித்தும் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது ‘அர்ஜுன் ரெட்டி படத்தில் நான் குண்டாக நடித்து இருந்தேன். உடல் பருமன் காரணமாக எனக்கு அடுத்தடுத்த படங்கள் வரவில்லை என்று விமர்சனங்கள் வந்தன. குண்டாக இருக்கிறார், வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி இருக்கிறது என்றெல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை அதிகமாக கேலி செய்கிறார்கள். நடிகைகளை இப்படி உருவ கேலி செய்வது சரியல்ல. ஆனால் நான் இதற்கெல்லாம் வருத்தப்பட போவது இல்லை’ என்று கூறியுள்ளார்.