இயக்குனர் மீது ‘மீடு’ புகார் அளித்ததால் ஷாலு ஷம்முவிற்கு ஏற்பட்ட நிலை. புலம்பும் நடிகை.

0
3460
shalu-shammu
- Advertisement -

கடந்த சில காலமாகவே இளசுகள் மத்தியில் சென்சேனாக இருந்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன்  படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார். தற்போது அம்மணி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க :பிரியா பவானி சங்கர் பிறந்தநாளுக்கு எஸ் ஜே சூர்யா செய்துள்ள விஷயம். அப்போ அந்த கிசுகிசு உண்மையா ?

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று பிரபல இயக்குனர் கூறியதாக வருத்தப்படாதா வாலிபர் சங்கம் பட நடிகை பகீர் குற்றச்சாட்டை ‘நீங்கள் மீடூவால் பாதிக்கபட்டுள்ளீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார்’ அதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு ‘விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதனை தான் வெளியில் சொல்லவில்லை ‘ என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மீடு புகார் தெரிவிதிர்ந்த்தால் சில பட வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வேடிக்கை உலகம்:

இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் மீடு புகாரை தெரிவித்த பின்னர் எனக்கு பல்வேறு படங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், என்னை சர்ச்சையான நாயகியாக பார்ப்பதை கைவிட வேண்டும். அதே போல சினிமாவில் வாய்ப்பிற்காக பெண்களை பயன்படுத்தும் இந்த நிலைமை மாற வேண்டும் என்று மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார் ஷாலு ஷம்மு. இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் இவரிடம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் விளம்பரபடத்தில் நடிக்க சம்மதம் கேட்டுள்ளார். ஒரு விளம்பரத்திற்கு 50 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் 1 லட்சம் தருகிறேன் என்னுடன் டேட்டிங் வருகிறீர்களா என்று அந்த நபர் ஷாலுவை தொடர்ந்து தொல்லை செய்துள்ளார். அந்த நபர் அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷாலு ஷம்மு வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement