தங்கமயில் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து சீரியல் நடிகை சரண்யா துராடி சொன்ன விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா துராடி திகழ்ந்து வருகிறார்.இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா அவர்கள் செய்தி வாசிப்பாளராக மீடியாவில் நுழைந்தார். அதன் பின்னர் இவர் ராஜ், ஜீ தமிழ் என பல தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார்.

மேலும், இவர் 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' என்ற படத்திலும் நடித்திருந்தார். அதன்பின்னர் இவர் சில படங்களில் நடித்தார். இருந்தும் சரியாக சினிமா வாய்ப்புகள் அமையாததால் இவர் மீண்டும் சின்னத்திரை நோக்கி வந்து விட்டார். இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற சீரியலில் நடித்திருந்தார். பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரன்' என்ற தொடரில் நடித்திருந்தார்.
சரண்யா குறித்து:
ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விளக்கி விட்டார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆயுத எழுத்து' சீரியலில் கமிட் ஆகி இருந்தார். ஆனால், அந்த சீரியலும் திடீரென்று நிறுத்தப்பட்டது. பின்னர் கிட்டத்தட்ட இவர் ஓராண்டு எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்தார். அதன் பின்னர் இவர் 'வைதேகி காத்திருந்தாள்' என்ற தொடரில் நடித்திருந்தார். 50 எபிசோட்களை கடந்த பின் இந்த சீரியலும் திடீரென்று நிறுத்தப்பட்டது. பின் சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது இவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் அண்ணன்- தம்பிகள் மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பானது. முதல் சீசன் முடிந்த கையோடு தற்போது ,பாண்டியன் ஸ்டோர்ஸ் 2,, இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இது அப்பா -மகன்கள் இடையே நடக்கும் பாசக் கதை. ஆரம்பத்தில் இந்த இரண்டாவது சீசனிற்கு வரவேற்பு இல்லை என்றாலும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
தங்கமயில் கதாபாத்திரம்:
தற்போது சரண்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தங்கமயில் கதாபாத்திரம் ரசிகர்களால் வெறுக்கப்படும் ஒரு கதாபாத்திரமாகும். இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சரண்யா பேசியுள்ளார். அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க நான் எடுத்த முடிவு ரொம்பவும் சரியானது தான். அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். முதலில் இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க வேண்டுமா என்று யோசித்தேன்.
https://www.youtube.com/watch?v=dd84fZrSG3I
சரண்யா பேட்டி:
இதற்கு முன் நடித்த கதாபாத்திரம் எல்லாமே போல்டான கேரக்டர் தான். தங்கமயில் கதாபாத்திரத்திற்கு முதலில் யோசித்தேன். பிறகுதான் நடிக்க தொடங்கினேன். நடிக்க தொடங்கியதும் நெகட்டிவ் கமெண்ட் வர, எனது அப்பா இதில் நடிக்க வேண்டுமா என்று கேட்டார். முதலில் தங்க மயிலாக நடித்தது வருத்தமாக தான் இருந்தது. ஆனால், கொஞ்ச நாள் போகட்டும் என்று யோசித்தேன். நான் பொறுமையாக இருந்தது நல்லது தான். இப்போது நிலைமை மாற தொடங்கியுள்ளது என கூறியுள்ளார். சமீபத்தில் கூட, தனக்குத் திருமணம் ஆன விஷயத்தை ஒரு பேட்டியில் நடிகை சரண்யா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






