எல்லாரும் சமம்னு சொல்றீங்க, அப்போ அனைவரையும் அர்ச்சராகனும்ன்றதையும் ஏத்துக்கோங்க – நடிகை ஷர்மிளா கேள்வி

0
779
sharmila
- Advertisement -

இந்தியா முழுவதும் கர்நாடக ஹிஜாப் பிரச்சனை காட்டுத் தீயாய் கொழுந்துவிட்டு எரிகிறது. இதனால் ஒவ்வொரு மதத்தினருக்கு இடையே தேவையில்லாமல் வாக்குவாதங்களும், பிரச்சனைகளும் எழுகிறது. கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்ற சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, பருதா, புர்கா அணிந்து கல்லூரிக்கு வர கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து வகுப்பறைக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

-விளம்பரம்-

இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். பின் இது தொடர்பாக உயர் நீதி மன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டும், காவி துப்பட்டாவும் அணிந்து வந்தனர். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் மத ரீதியாக பிரச்சனை நிலவியது. பின் மாணவ, மாணவிகள் பொதுவான சீருடையை அணிந்து வர வேண்டும் என்று மாநில அரசு அதிரடி உத்தரவிட்டது.

- Advertisement -

இந்துத்துவா – இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல்:

இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகாவில் இந்துத்துவா மாணவர்களுக்கும், இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு காயம் அடைந்தனர். உடனடியாக போலீஸ் வந்து லத்தி சார்ஜ் நடத்தி மாணவ, மாணவியரை அப்புறம் படுத்தி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய்ஸ்ரீராம் என்று கரகோஷம் செய்த பிரச்சனை சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல நடிகை ஷர்மிளா அளித்த பேட்டி:

மதரீதியாக கல்லூரி மாணவர்கள் இப்படி மோதிக்கொள்ளும் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் டாக்டரும், பிரபல நடிகையுமான ஷர்மிளா அவர்கள் ஹிஜாப் பிரச்சினை குறித்து நடந்த விவாத மேடையில் பேசி இருக்கிறார். அப்போது அவர் கூறி இருப்பது, ஹிஜாப் போடுவதால் பொது மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், மத ரீதியாகவும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? அவமானம், அசிங்கம் ஏற்படுகிறதா? இதனால் எந்த மத மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்து மதம் ப்ரச்சனை பற்றி ஷர்மிளா சொன்னது:

அப்புறம் ஏன் இதற்கு இவ்வளவு பெரிய பிரச்சனையை செய்கிறீர்கள்? எல்லோருக்குமே சம உரிமை வேண்டும், எல்லோரும் ஒற்றுமை என்றெல்லாம் சொல்கிறீர்கள். பிறகு ஏன் போராட்டம் செய்கிறீர்கள்? சொல்லப்போனால் இந்து மதத்திலேயே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் விதித்தபோது பிராமணர்கள் எல்லோரும் சேர்ந்து ஒத்துக் கொள்ள முடியாது என்று போராட்டம் செய்து இருந்தார்கள். உங்களுடைய மதத்துக்கு உள்ளே சம உரிமை கொடுக்கவில்லை. முதலில் உங்கள் மதத்தில் இருக்கிறவர்களுக்கு சம உரிமை கொடுங்கள். அதற்குப்பிறகு அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசலாம்.

முஸ்லீம் மக்களுக்கு நடந்த அநீதி:

உங்களுடைய மதத்தில் இருக்கக்கூடிய ஓட்டைகளை அடையுங்கள். அதுமட்டுமில்லாமல் இந்துக்களை தான் எல்லோரும் சேர்ந்து துன்புறுத்துகிறார்கள், தாக்குகிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், உண்மையைச் சொல்லப் போனால், மைனாரிட்டி உள்ள முஸ்லிம் தான் அதிகம் தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து எவ்வளவோ விஷயத்தை பண்ணி இருக்கிறீர்கள். பொது இடத்தில் நமாஸ் பண்ணக்கூடாது, மாட்டுக்கறி சாப்பிட கூடாது என்று தடை செய்தீர்கள். இப்ப ஹிஜாப் போடக்கூடாது என்று பிரச்சனை செய்கிறீர்கள். அதேபோல் சோசியல் மீடியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக ஆப்பை உருவாக்கி கேவலம் கேவலமாக பேசி இருக்கிறீர்கள்.

கர்நாடக அமைச்சர் சொன்னது:

ஹரித்துவாரில் முஸ்லிம்களை கொன்று குவிக்கன்னும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். தற்போது கர்நாடக அமைச்சர் ஒருவர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் யார் பண்ணறது? ஒரு மைனாரிட்டி மதத்தை இப்படி டார்கெட் செய்வது யார்? இப்படி எல்லாம் நீங்கள் செய்துவிட்டு இந்து மதத்தை அழிக்கிறார்கள்? இந்து மதத்தை தாக்குகிறார்கள் என்று சொல்வதெல்லாம் நியாயம் இல்லை என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.

Advertisement