இது போல மற்ற மதத்தை கேலி செய்வீர்களா ? ராமரை கேலி செய்யும் வகையில் ஷர்மிளா பகிர்ந்த புகைப்படத்திற்கு வலுக்கும் கண்டனங்கள்.

0
861
Sharmili
- Advertisement -

தொலைக்காட்சி என்ற ஒரு தொடங்கிய காலத்திலிருந்து சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியல்களை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. மேலும், தொடர்கள் மட்டுமில்லாமல் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் சின்னத் திரையின் மூலம் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் நடிகை ஷர்மிளா. இவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற டாக்டர் ஆவார்.

-விளம்பரம்-

பிறகு இவர் ஜெயா டிவியில் ஒரு வினாடி வினா என்ற நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து ‘இந்த வாரம் இவர்’ என்ற உரையாடல் நிகழ்ச்சியை ஷர்மிளா நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பலத்தினால் இவர் விவாத மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். மேலும், மருத்துவத்துறையை சேர்ந்த மறைந்த டாக்டர் மாத்ருபூதம் உடன் இணைந்து இவர் விஜய் டிவியில் புதிரா? புனிதமா? என்ற நிகழ்ச்சியும் பங்கேற்று நடத்தினார்.

- Advertisement -

புதிரா புனிதமா நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் செக்ஸ் தொடர்பான கேள்விகளை டாக்டர் மாத்ருபூதம் உடன் ஷர்மிளா முகம் சுளிக்காமல் பதில் அளித்ததால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியின் போது ஷர்மிளா குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது. அதற்கு பிறகு தான் இவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாள மொழிகளிலும் பல்வேறு சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

ஷர்மிளாவின் சின்னத்திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஷர்மிளா வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். இப்படி இவர் மருத்துவர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைப்பட நடிகை என பன்முகம் கொண்டு விளங்கி இருந்தார். இதனிடையே ஷர்மிளா அவர்கள் தொலைக் காட்சி தயாரிப்பு நிர்வாகி மோகனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான கொஞ்ச நாளிலேயே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது இவர் மூன்றாவது முறையாக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜியை ஷர்மிளா திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

ஷர்மிளா பதிவிட்ட பதிவு:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ரோஜா என்ற தொடரில் கதாநாயகியின் அம்மாவாக நடித்து கொண்டிருக்கின்றார். இது ஒரு பக்கமிருக்க, ஷர்மிளா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் கூட கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் பிரச்சனையை எதிர்த்து குரல் கொடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல் சமீபகாலமாகவே சர்மிளா இந்து மதம் சார்ந்த சர்ச்சையான விஷயங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு படி மேல் போய் ஷர்மிளா செய்திருக்கும் செயல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விமர்சித்து நெட்டிசன் கூறியது:

அது என்னவென்றால், கடவுள் ராமரையும், கணினி RAM யும் ஒப்பிட்டு அருவருப்பான பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஷர்மிளாவை கடுமையாக கண்டித்து பதிவுகளை போட்டு வருகிறார்கள். அதில் ஷர்மிளாவின் பதிவைப் பார்த்து ஒருவர் கூறி இருப்பது, மத சண்டையை கிளறி விடுவதில் இது மாதிரி ஆளுங்க தான். ஒரு மதத்தின் நம்பிக்கையை இழிவு படுத்தினால் அடுத்த மதத்துகாரன் ஆட்டோமெட்டிக்காக இன்னொரு மதத்தின் நம்பிக்கையை இழிவுபடுத்துவான். பதிலுக்கு பதில் இங்கு இருக்கு. நீங்க செய்றது வெறுப்பின் வெளிப்பாடு. கற்றோர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார். மேலும், இது போல மற்ற மாதத்தின் கடவுளை கேலி செய்வீர்களா என்றும் கண்டித்து வருகின்றனர்.

Advertisement