இன்ஸ்டாவில் Follow செய்தது மட்டுமல்லாமல், ஏர் ஆர் ரஹ்மான் கொடுத்த மிகப்பெரிய கௌரவம். சந்தோஷத்தில் சுந்தரி சீரியல் கேப்ரில்லா.

0
837
Gabriella
- Advertisement -

பொதுவாகவே வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்தளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இருந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலருக்கும் பரிட்சயமானார் கேப்ரில்லா. அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Serial Gabriella Sellus Transformation Video | சுந்தரி சீரியல்

மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா. இந்த திரைப்படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார்.

- Advertisement -

கேப்ரில்லாவின் சுந்தரி சீரியல்:

அதோடு இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் என்பதால் நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார். அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. தற்போது கேப்ரில்லா நடித்து வரும் சுந்தரி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது.

ஏ ஆர் ரகுமான் ஆல்பத்தில் கேப்ரில்லா:

இந்நிலையில் கேப்ரில்லா , இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இயக்கியிருக்கும் ஆல்பம் சாங்கில் பணியாற்றி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஆஸ்கர் நாயகன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இண்டிபெண்டன்ட் ஆல்பம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த ஆல்பத்திற்கு ‘மூப்பில்லா தமிழ் தாயே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. உடனே எல்லோரும் இந்த ஆல்பத்தில் கேப்ரில்லா நடித்துள்ளார் என்று நினைப்பீர்கள்? ஆனால், அதுதான் கிடையாது. இந்த பாடலில் கேப்ரில்லா பாடியுள்ளார். ஆமாங்க, ஏ ஆர் ரஹுமானின் ‘மூப்பில்லா தமிழ் தாயே’ என்ற ஆல்பத்தில் கேப்ரில்லா உடன் சேர்த்து மொத்தம் 11 பேரு பாடியுள்ளனர்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரகுமானின் இன்ஸ்டா குறித்த தகவல்:

இது குறித்து ஏற்கனவே கேப்ரில்லா தன்னுடைய சோசியல் மீடியாவில் ஏ ஆர் ரஹ்மானுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சேர் செய்து, நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காத நிஜம் நடந்தது. இது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு. இறைவனுக்கு நன்றி என்று கூறி இருந்தார். பின் இவரைத் தொடர்ந்து அதே புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கேப்ரில்லாவை கவுரவித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் நம்ம இசை ஜாம்பவான் ஏ.ஆர். ரகுமான் இன்ஸ்டாவில் பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை வெறும் 73 பேர் தான். அவர் முக்கியமான நபர்களை மட்டுமே தான் பாலோ செய்வார்.

‘மூப்பில்லா தமிழ் தாயே’ ஆல்பம் வெளியீடு:

அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாவில் கேப்ரில்லாவை பாலோ செய்கிறார். ஆகவே ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாவில் முக்கியமான நபர்களில் ஒருவராக கேப்ரில்லா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏ ஆர் ரகுமானின் ‘மூப்பில்லா தமிழ் தாயே’ ஆல்பம் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. இது குறித்து கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஷேர் செய்திருந்தார். அதில் அவர், ‘மூப்பில்லா தமிழ் தாயே’ பாடல் வெளியானது. இதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன்.

ஏ ஆர் ரகுமான் உடன் சேர்ந்து பாடியவர்கள்:

ஏ ஆர் ரஹ்மான் சாருக்கு மிகவும் நன்றி. இது கனவு மாதிரி இருக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு இந்த ஆல்பத்தில் மற்றொரு வளரும் திறமைசாலியாக விஜய் டிவியின் செல்லக்குட்டி, சூப்பர் சிங்கர் ஜூனியர் பூவையாரும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார். இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் உடன் கேப்ரில்லா, பூவையாரு தவிர சைந்தவி பிரகாஷ், கதிஜா ரஹ்மான், அமீன் அரபிக், ரக்ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார், நகுல் அபியங்கர் என பல பேர் பாடி உள்ளனர். தற்போது இந்த பாடல் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்கப்பட்டு வருகிறது.

Advertisement