ஆய்வுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா ? – உதயநிதியை விமர்சித்த ஜெயகுமார். MGR புகைப்படத்தை பதிவிட்ட ஷர்மிளா

0
3248
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 1175 பயணிகளில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த கோர விபத்தில் ஹவுரா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் அதுமட்டுமில்லாமல் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவதாக ரயில்வே அமைச்சர் அறிவித்திருக்கிறார்.தற்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர், மு க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த கோர சம்பவத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இது ஒரு துக்க நாள் நாளாக அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர். நேற்று ஒடிசாவில் இருந்து சென்னை கிளம்பும் போது 8 பேர் குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. ஆனால் அவர்கள் நலமுடன் உள்ளார்கள். ஒடிசாவிலிருந்து புறப்பட்ட போது 8 பேர் பற்றி தகவல் இல்லை.

அதில் 2 பேரிடம் பேசிய போது, 8 பேரும் நலமோடு உள்ளதாக தெரிந்து கொண்டேன். அவர்கள் பயணித்த ரயில் பெட்டியில் பெரிய பாதிப்பு இல்லை. விரைவில் மற்ற 6 பேருடனும் விரைவில் பேசுவேன். 2 நாட்களில் முழு தகவல் தெரியும். பிரதமர் வருகிறார் என்பதால், ரயில் விபத்து நடந்த இடத்திற்கு எங்களை அனுமதிக்கவில்லை.ஒடிசாவில் சுமார் ஒரு மணிநேரம் மருத்துவமனையில் இருந்தோம்.

-விளம்பரம்-

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆலோசனை கூறினோம். சடலங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததை பார்க்கும்போது மனத்துக்கு மிகவும் வேதனையாக இருந்தது” எனக் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உதயந்து கண்ணாடி அணிந்து செல்லும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘நாடே மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளது! இன்னும் கண்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நம் கண்களை மூடவிடாமல் செய்கின்றன.

இன்னும் நம் காதுகளில் மரண ஓலங்கள் ஒலித்துகொண்டிருக்கின்றன! இத்தனை இடர்களுக்கு இடையிலும் ஆய்வுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா’ என்று விமர்சித்து இருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிலா அண்ணாவின் இறப்பின் போது எம் ஜி கூலிங் கிளாஸ் அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement