தனக்கு புற்றுநோய் என்று பரவிய செய்திக்கு நடிகர் சிரஞ்சீவி கொடுத்த விளக்கம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிரஞ்சீவி. ‘மெகா ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காட்பாதர்.
இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை அடுத்து சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராம் சரண் தேஜா, காஜல் படத்தில் பூஜா ஹெக்டே, சோனு சூட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது.
ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை. இதனை அடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்த படம் வால்டர் வீரய்யா. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், சிரஞ்சீவியின் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையிலும் அதிக தொகையை வசூல் செய்த திரைப்படமாக இப்படம் உருவெடுத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் போலோ சங்கர்.
இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு புற்றுநோய் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, நடிகர் சிரஞ்சீவி அவர்கள் கடந்த சனிக்கிழமை ட்விட்டர் பக்கத்தில், பெருங்குடலில் பரிசோதனை செய்திருக்கிறேன். அப்போது புற்றுநோய் அல்லாத பாலிப்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு இருக்கிறது.
அப்படி அகற்றப்படவில்லை என்றால் அது புற்றுநோயாக மாறும் என்று கூறியிருந்தார். இந்த பதிவுதான் இணையத்தில் வைரல்ஆகி இருந்தது. அதற்கு சில ஊடகங்கள் சிரஞ்சீவிக்கு புற்றுநோய் இருந்தது. அதற்கு அவர் சிகிச்சை எடுத்து அகற்றி விட்டார் என்று செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த தகவல் தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
இந்நிலையில் தன்னை பற்றி வரும் வதந்திக்கு நடிகர் சிரஞ்சீவி அவர்கள் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், புற்றுநோய் மையத்தை திறந்து வைக்கும் போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு செய்தேன். அதனால் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று தெரிவித்தேன். அதோடு எனக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது புற்றுநோய் அல்லாத பாலிஸ்கள் கண்டுபிடித்து நீக்கப்பட்டதாக கூறினேன்.
நான் பரிசோதனை செய்யாமல் இருந்திருந்தால் அது கேன்சராக மாறி இருக்கும் என்று சொன்னேன். இதனால் அனைவரும் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன். நான் சொன்னதை சில மீடியாக்கள் தவறாக புரிந்து கொண்டு எனக்கு கேன்சர் இருக்கிறது. அதனால் தான் நான் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தவறான தகவல்களை கூறுகிறார்கள். இதனால் என்னுடைய நலன் விரும்பிகள் பலரும் பயந்து கொண்டு என்னுடைய உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள். தகவல் என்னவென்று முழுமையாக தெரியாமல் தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.