விஷாலை விமர்சித்த பாடகி சுசித்ராவை ஷர்மிளா வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது. அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருக்கிறார்கள். உண்மையில் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் வந்திருக்கிறது என்று கூறி இருந்தார்கள்.
மதகஜராஜா படம்:
பின் இது தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோவில், என் வீட்டோட காலிங் பெல் அடித்தது. நான் போய் கதவை திறந்து பார்த்தால் விஷால் நின்றிருந்தான். அவன் கண்ணெல்லாம் மஞ்சள் கலர், பல் எல்லாம் மஞ்சள் கலரில் இருந்தது. அவன் கையில் வேற ஒரு ஒயின் பாட்டில் இருந்தது. அப்போது அவன், கார்த்திக் இல்லையா? என்று கேட்டான். நான் இல்லை என்று சொல்லிவிட்டேன். அதற்கு பிறகும் என்னிடம் அவன், நான் வீட்டுக்குள் வரலாமா? என்று கேட்டான். நான் முடியாது என்று சொன்னேன். இது தான் உங்க விஷால். அவருக்காக தான் நீங்க எல்லாம் வேண்டிக்கிட்டு இருக்கீங்க. ஆனா, அன்னைக்கு ஒயின் பாட்டில் புடிச்சிட்டு இருந்த கை தான் இன்னைக்கு நடுங்குது. எனக்கு ரொம்ப சந்தோஷம் இப்படி பாக்குறதுக்கு என்று கூறியிருந்தார்.
சுசித்ரா சொன்னது:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஷர்மிளா, சுசித்ரா நல்ல பாடகி. திறமையானவர், அழகானவர். ஆனால், அவர் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று புரியவில்லை. அவர் எந்த உலகத்தில் இருக்கிறார். வைரமுத்து, தனுஷ் போன்றவர்களை பற்றி சுசித்ரா பேசியிருந்தார். அவர்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால், விஷாலை பற்றி தவறாக பேசுவது எனக்கு கோபம் தான் வருகிறது. காரணம், தனிப்பட்ட முறையில் எனக்கு விசாரணை பற்றி நன்றாகவே தெரியும். பலமுறை பல youtube சேனல்களுக்கு
சுசித்ரா பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போதே விஷால் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று சொல்லி இருக்கலாமே? அதை விட்டுட்டு திடீரென்று இப்போது விஷாலை பற்றி பேசுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது.
ஷர்மிளா பேட்டி:
சோசியல் மீடியாவில் எந்த ஒரு செய்தி விவாதத்திற்கு வரும்போது அதை பற்றி பேசுவதை சுசித்ரா வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படித்தான் விஷால் குறித்தும் பேசி இருக்கிறார். சாதாரணமாக நாம் ஒரு நண்பர் வீட்டிற்கு போவதற்கு முன்பே போன் செய்து வீட்டில் இருக்கிறார்களா? என்று கேட்டு போவோம். ஆனால், விஷால் போன்ற ஒரு செலிபிரிட்டியான ஒரு ஆள் போன் எதுவும் செய்யாமல் திடீரென்று வந்தார், கையில் ஓயின் பாட்டில் வைத்திருந்தார் என்று சொல்வதெல்லாம் நம்பும் படியாக இல்லை. சுசித்ராவே விஷாலை கூப்பிட்டு இருக்க வேண்டும், இல்லை என்றால் சுசித்ரா சொல்வதெல்லாம் பொய். தனுஷ், வைரமுத்து வந்தார்கள்,தவறாக நடந்து கொண்டார் என்று அடுக்கடுக்காக அடுத்தவர்கள் மீதெல்லாம் குறை சொல்லி இருந்தார். ஆனால், அவர் இதற்கான ஆதாரங்களையும் கொடுக்கவில்லை.
சுசித்ராவை விளாசல்:
சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது ஒரு பாடகியின் வீட்டுக்கு அனைவரும் செல்வதற்கான காரணம் என்ன? ஒரு நடிகையான என் வீட்டுக்கு யாரும் வருவதில்லையே. காரணம், நான் ஒரு குழந்தையின் தாய் என்று எல்லோருக்குமே தெரியும். அனைவரும் வருகிறார்கள் என்றால் அவர்களை வரவேற்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என்று தான் அர்த்தம். ஒரு நல்ல மனிதர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலைமையிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது வைப்பது
தேவைதானா? அந்த நபருக்காக கடவுளிடம் வேண்டுகிறீர்களா என்று கேட்டிருப்பது நியாயமா? அவர் அப்படி என்ன உங்களுக்கு கெடுதல் செய்துவிட்டார். சுசித்ரா சொல்வதெல்லாம் கற்பனை கலந்த ஆதாரம் இல்லாத ஒன்று என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.