மோடிக்கு ஆதரவாக பேசியதால் சமூக வலைதளத்தில் கேலிக்கு உள்ளாகும் ஷோபனா – என்ன காரணம்?

0
190
Shobana
- Advertisement -

கேரளாவில் நடந்த மாநாட்டில் மோடிக்கு ஆதரவாக சோபனா பேசியதால் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் பதிவு தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கேரள மாநிலம் திருச்சூரில் மகளிர் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கி இருந்தார். இந்த நிகழ்வில் நடிகை சோபனாவும் பங்கு பெற்றிருந்தார். அப்போது மேடையில் நடிகை சோபனா, மகளிர் மசோதாவை நிறைவேற்றிய சிறந்த தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

-விளம்பரம்-

மீண்டும் மோடியின் உடைய தலைமையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பெண்களை தெய்வமாக வழிபடுவது நம்முடைய பாரம்பரியம். ஆனால், பல இடங்களில் அவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். இன்றும் எல்லாத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாக தான் இருக்கிறது. நம்மிடம் ஒரு சகுந்தலா தேவி, ஒரு கல்பனா சாவ்லா, ஒரு கிரண்பேடி மட்டும் தான் இருக்கிறார்கள்.

- Advertisement -

மோடி குறித்து சொன்னது:

தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா பெண்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வாழ்நாளில் இத்தனை பெண்களை பார்ப்பது இதுவே முதல் முறை என்று புகழ்ந்து பேசி இருந்தார்.

நெட்டிசன்கள் ட்ரோல்:

இப்படி மோடியை புகழ்ந்து பேசிய நடிகை சோபனாவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். அதிலும் சிலர் சங்கி என்றும், ஷோபனா போன்ற திரைக்கவிஞர்கள் அரசியலுக்கு வராமல் இருந்தால் நிறைய சாதிக்கலாம். அவருடைய இந்த முடிவு எனக்கு ஏமாற்றம், சோபனா அவர்கள் மோடிக்கு நல்லா ஒத்து மோளம் ஊதுகிறார் என்றெல்லாம் ட்ரோல் செய்து விமர்சித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சோபனா திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் சோபனா. இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார். இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

சோபனா குறித்த தகவல்:

மேலும், சோபனா அவர்கள் திரைப்பட நடிகை என்பதை விட புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியக் கலைக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். இவர் சினிமா உலகில் வாய்ப்புகள் குறைந்த உடன் நடிப்பில் இருந்து விலகி விட்டார். இவர் பல வருடங்களாக பரதநாட்டியம் கிளாஸை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சமீப காலமாக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

Advertisement