திருமணமே ஆகாமல் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் ஷோபனா

0
171
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சோபனா. இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சோபனா அவர்கள் திரைப்பட நடிகை என்பதை விட புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் தன்னுடைய பரதநாட்டியக் கலைக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

-விளம்பரம்-

சினிமா துறையில் 1980 காலங்களில் தன்னை ஒரு முன்னணி நடிகையாக மாற்றிக்கொண்ட இவர் கே. பாலகிருஷ்ணன், கைலாசம், அரவிந்தன், மணிரத்தினம் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். ஷோபனா மிகைத்திறமையான பரதநாட்டி கலைஞர் ஆவார். இவர் பிரபல பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனின் சிதம்பரம் பயிற்சி மையத்தில் தன்னுடைய நடன பயிர்ச்சியை முடித்தார்.

- Advertisement -

வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள்

மேலும் 1985ல் இருந்து 1995 வரையிலான ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக மலையாள மாநாட்டில் மலேஷியாவின் மன்னர் முன்பு நடனமாடினார். மேலும் அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, போன்ற பல நகரங்களில் நடன நிகழ்ச்சியை நிகழ்த்தி பாராட்டுகளை பெற்றார். இவர் ஜெர்மனியில் நடந்த மைக்கேல் ஜாக்சன் அண்ட் பிரான்ஸ் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடன கலைஞர்களான பிரபு தேவ மற்றும் ஏ.ஆர் ரகுமானுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

ஷோபனா நடன பள்ளி :

நடிகை ஷோபனா பரதநாட்டிய கலைஞராக மட்டுமில்லாமல் 1994ஆம் ஆண்டு சென்னையில் “கலார்ப்பனா” என்ற ஒரு நடன பள்ளியை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபபான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்துள்ளார். கடந்த 2019அம ஆண்டு நடிகை ஷோபனாவிற்கு அம.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

ஷோபனா வளர்ப்பு மகள் :

இப்படி நடன கலையின் மீது ஆர்வம் கொண்ட ஷோபனாவிற்கு தற்போது 52 வயதாகிறது இருந்தாலும் திருமணத்தின் மீது ஆர்வம் இல்லாத காரணத்தினால் இதுவரையில் திருமணம் செய்யவில்லை. இந்த நிலையில் தான் கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். அவரது பெயர் ஆனந்த நாராயணி சந்திரகுமார் என்பதாகும். இவரின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement