வலைப்பேச்சு குழு தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிம்ரன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. அந்த வகையில் யூடியூப் சேனலில் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக நிற்கிறார்கள். அந்த வகையில் பிரபலமான யூடியூப் சேனலில் ஒன்றுதான் வலைப்பேச்சு. இதில் அந்தணன், பிஸ்மி, சக்திவேல் ஆகியோர் குழுவாக சேர்ந்து பிரபலங்கள், படங்கள், கிசுகிசுக்கள் என தினமும் பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை சிம்ரனை விமர்சித்து சமீபத்தில் போட்ட வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், அசல் ஊர் காரன் என்றால் ஆழம் தெரியாமல் காலை விடுவான். ஆனால், உள்ளூர் காரனுக்கு ஆழம் தெரியும். அதுபோல் நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்குது. சினிமா தயாரிக்கிறேன்னு சொல்லிட்டு நடிகை நடிகர்கள் எல்லாம் வருவார்கள். இங்க வந்தா எவ்வளவு அவஸ்தைப்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது. வெளியில் இருந்து பார்ப்பது வேறு. அதேபோல், நடிகர் நடிகைகளே, ஹீரோ ஹீரோயினா சினிமாவை பார்க்கும் போது வேறு மாதிரி இருக்கும்.
சிம்ரனை வம்பிழுத்த வலைப்பேச்சு:
ஜூஸ் கொடுக்கறதுக்கு ஷூ போடுவதற்கு எல்லாமே ஆட்கள் இருப்பார்கள். அவர்களே ப்ரொடியூசர் ஆக மாறும்போது சினிமாவே வேற மாதிரி இருக்கும். இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது. இது எல்லாம் தெரியாத சிம்ரன் சமீபத்தில் விஜயிடம், ‘சார் உங்களை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறேன். நீங்க எனக்கு டேட் கொடுப்பீங்களா’ என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால், விஜய் ரொம்ப அழகாக எதார்த்தத்தை எடுத்து சொல்லி இருக்கிறார். ‘எப்பவுமே என்னுடைய படம் ரிலீஸ் ஆகும் போது ஏகப்பட்ட சிக்கல்கள் வரும். அதையெல்லாம் நீங்கள் தாங்க மாட்டீர்கள். பிரச்சனைகள் எங்கிருந்து வரும் என்றே தெரியாது.
சிம்ரன் பதிவு :
அதனால் அதெல்லாம் வேண்டாம். நீங்க ஹாப்பியா இருங்க’ என்று சொல்லி அனுப்பி விட்டாராம்’ என்று நடிகை சிம்ரனை வம்பு இழுத்து பேசி இருக்கிறார்கள். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், நடிகை சிம்ரன் வலைப்பேச்சு குழுவை கண்டித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் உங்களை எப்படி உணர்ச்சிப்பூர்வமாக கையாளுகிறார்கள் என்பதையும், அதற்கு உங்கள் நண்பர்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதை பார்க்கும்போது உண்மையில் வருத்தம் அளிக்கிறது. இது வரைக்கும் நான் அமைதியாக இருந்தேன்.
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்:
ஆனால், நான் தற்போது தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எந்த பெரிய ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்ற ஆசைப்படவில்லை. நான் அதையெல்லாம் முன்பு செய்திருக்கிறேன். ஆனால், தற்போது எனது இலக்குகள் வேறு, ஒரு பெண்ணாக என் எல்லைகளை நான் அறிவேன். பல ஆண்டுகளாகவே எனது பெயர், சமூக ஊடகங்களில் தோன்றிய போதும், ஹீரோக்களடன் இணைக்கப்பட்டு பேசும்போது எல்லாம் நான் அமைதியாக இருந்தேன். ஆனால், தற்போது சுயமரியாதை என்பது ரொம்ப முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். ‘நிறுத்து’ என்பது ஒரு சக்தி வாய்ந்த வார்த்தை, அது இங்கே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
பிரபலங்கள் ஆறுதல்:
இது போல் வரும் வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க யாரும் நினைக்கவில்லை. மேலும், என்னுடைய உணர்ச்சிகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. மேலும், நானே என் பெயரை எங்கும் தேவையில்லாமல் பயன்படுத்திக் கொள்வதில்லை. நான் எப்போதும் சரியான விஷயங்களில் உறுதியாக நிற்பேன். மேலும், சினிமா தொழிலில் உள்ள அனைவரிடமும் அதே நேர்மையை எதிர்பார்க்கிறேன். இதுபோல் பொய்யான வதந்திகளை பரப்புபவர்கள் என்னிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதவித்துள்ளார்.இந்த பதிவை பார்த்துவிட்டு, பிரபலங்கள் பலரும் நடிகை சிம்ரனுக்கு ஆறுதலாக பதிவிட்டு வருகிறார்கள்.