கர்ப்பமாக இருந்த போதும் சிரமபட்ட சினேகா. வைரலாகும் வீடியோ.

0
85484
sneha
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. இவர் 2001 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நீலப்பக்சி’ என்ற மலையாள மொழித் திரைப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர். அதே ஆண்டிலேயே ‘என்னவளே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள்.

-விளம்பரம்-

2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார்கள். பின்னர் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. மேலும், சினேகா அவர்கள் இரண்டாவது முறை கர்ப்பமாக உள்ளார். அதற்காக சமீபத்தில் தான் சினேகாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்தது. தற்போது சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர் என்றும் கூறி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய விஜய். வீடீயோவை ட்ரெண்ட் செய்யும் ரஜினி ரசிகர்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து உள்ள படம் “பட்டாஸ்”. இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து உள்ளது. கொடி படதிற்கு பிறகு இயக்குநர் துரை செந்தில் குமார் அவர்கள் இரண்டாவது முறையாக தனுஷ் அவர்கள் இந்த பட்டாஸ் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். விவேக்- மெர்வின் இசை அமைத்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும்.

சினேகா அவர்கள் இந்தப் படத்தில் அட்ராசிட்டி ஆக நடித்து உள்ளார். படத்தில் சினேகா அவர்கள் தாயின் உணர்வும், கலையின் மீது உள்ள ஆர்வத்தையும் அழகான காண்பித்து உள்ளார். பட்டாசு படத்தின் போது சினேகா குறித்து இயக்குனர் துரை செந்தில் குமார் கூறியது, படத்தில் சினேகா கேரக்டர் மட்டும் தான் தனுஷ் கூடவே படம் முழுக்க வரும். முதலில் இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என நானும் தனுஷும் நிறைய பெயர்களை யோசித்தோம். ஆனால், சரியான நபர் கிடைக்கவில்லை. ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது சினேகா மேடம் பெயரை சொன்னேன். நான் உடனே தனுஷிடம் செல்லும்போது அவர் சூப்பர் பண்ணலாம் என்று கூறினார்.

-விளம்பரம்-

அப்புறம் சினேகா மேடம் கிட்ட கதை சொல்லி படத்தில் அம்மா கதாபாத்திரம் என்று சொன்னவுடன் அவர் முதலில் யோசித்தார்கள். பிறகு அடுத்த நாளே கால் செய்து ஓகே என்று சொல்லி விட்டார். இந்த படத்தில் சினேகா மேடத்தின் உழைப்பு ரொம்ப அதிகம் என்று சொல்லலாம். முதலில் நாங்கள் பிளாஸ் பேக்பகுதியைத் தான் ஷூட் பண்ணி கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. அடி முறையை சினேகா மேடம் ஈசியாக கற்றுக் கொண்டார்கள். சண்டை போடுகிற காட்சிகளில் கூட நல்லா பண்ணிட்டு வந்தார்கள். அதற்குப் பிறகு தான் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த நேரத்தில் சினேகா மேடம் கர்பமாக இருக்கிறார்கள். அவர்களை எப்படி வேலை வாங்குவது என எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால், அவர்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நைட் ஷு ட், பயிற்சி என எல்லாமே செய்து கொடுத்தார்கள். எங்களுக்காக எல்லா காட்சிகளையும் அருமையாக நடித்தார் என்று கூறினார்.

Advertisement